Indian Railways Penalty: ரயில்கள் மற்று ரயில் நிலையங்களை தூய்மையாக வைத்திருக்கும் நோக்கில் ரயில்வே நிர்வாகம் புதிய விதிகளை அறிவித்துள்ளது.

குப்பை போட்டால் ரூ.1000 அபராதம்

ஆங்கில நாளேடு ஒன்றில் வெளியாகியுள்ள தகவலின்படி, “ரயில் நிலையங்களிலும் ரயில்களிலும் குப்பை கொட்டுதல் மற்றும் தூய்மையைப் பாதிக்கும் பிற செயல்களுக்கான அபராதத்தை இந்திய ரயில்வே நிர்வகம் ஆயிரம் ரூபாயாக உயர்த்தியுள்ளது. திருத்தப்பட்ட இந்த விதிகள், முன்னர் இருந்த அதிகபட்ச அபராதமான ரூ.500-க்கு மாற்றாக அமலுக்கு கொண்டு வரப்பட்டுள்ளன. ரயில் மற்றும் ரயில் நிலைய வளாகங்களில் பயணிகள் மற்றும் பிறர் தூய்மை விதிமுறைகளை தீவிரமாக கடைபிடிப்பதை உறுதி செய்வதை நோக்கமாக கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாம். இதுதொடர்பாக இந்திய ரயில்வே (ரயில்வே வளாகங்களில் தூய்மையைப் பாதிக்கும் நடவடிக்கைகளுக்கான தண்டனைகள்) விதிகள், 2012-ஐத் திருத்தி, ரயில்வே அமைச்சகம் ஆகஸ்ட் 24 அன்று ஒரு அரசிதழ் அறிவிப்பை வெளியிட்டது.

ரூ.2000 வரை அபராதம் விதிக்கப்படலாம்..!

திருத்தப்பட்ட விதிகள், இந்திய ரயில்வே (ரயில்வே வளாகங்களில் தூய்மையைப் பாதிக்கும் நடவடிக்கைகளுக்கான அபராதங்கள்) திருத்த விதிகள், 2026' என அழைக்கப்படுகின்றன. அதிகாரப்பூர்வ அரசிதழில் வெளியிடப்பட்டதை தொடர்ந்து அந்த விதிகள் அமலுக்கு வந்துள்ளன. அதில் திருத்தப்பட்ட விதி 4-இன் கீழ், குப்பை போடுபவர்களுக்கு முன்னர் ரூ. 500 வரை விதித்திருந்த விதிமுறை தற்போது ரூ.1,000 ஆக மாற்றப்பட்டுள்ளது. அபராதம் செலுத்தப்படாவிட்டால், சம்பந்தப்பட்ட நபர் அதிகார வரம்பு கொண்ட தகுதியான நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, அங்கு ரூ. 2,000 வரை அபராதம் விதிக்ப்படலாம் என்றும் விதிகள் தெரிவிக்கின்றன.

எப்போது ரூ.1000 அபராதம் விதிக்கப்படும்?

வெளியாகியுள்ள தகவல்களின்படி, பயணிகள் மற்றும் ரயில் வளாகத்தில் உள்ள மற்றவர்கள், அதற்கென ஒதுக்கப்பட்ட இடங்களைத் தவிர, ரயில் நிலையங்களிலோ, ரயில் வளாகத்தின் வேறு இடங்களிலோ அல்லது ரயில் பெட்டிகளுக்கு உள்ளேயோ குப்பைகளை வீசவோ அல்லது விட்டுச் செல்லவோ கூடாது. அதற்கென பிரத்யேகமாக வசதிகள் வழங்கப்பட்டாலன்றி, வேறு பல செயல்பாடுகளையும் இந்த விதிகள் தடை செய்கின்றன.

ரயில்வே வளாகத்தில் சமைத்தல், குளித்தல், துப்புதல், சிறுநீர் கழித்தல், மலம் கழித்தல், விலங்குகள் அல்லது பறவைகளுக்கு உணவளித்தல், மற்றும் வாகனங்கள், பாத்திரங்கள் அல்லது துணிகளைக் கழுவுதல் ஆகியவை தடை செய்யப்பட்டுள்ளன. அதற்கான வசதிகள் வழங்கப்பட்டாலன்றி, ரயில்வே வளாகத்தில் பொருட்களைச் சேமித்து வைப்பதும் தடைசெய்யப்பட்டுள்ளது.

எதற்கெல்லாம் தடை தெரியுமா?

மேலும், பயணிகள் அனுமதியின்றி ரயில் பெட்டிகளிலோ அல்லது ரயில்வே சொத்துக்களிலோ சுவரொட்டிகளை ஒட்டுவதற்கும், எழுதுவதற்கும், வரைவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. ரயில்வே சொத்துக்களுக்கு சேதம் விளைவிக்கும் அல்லது அவற்றைச் சிதைக்கும் எந்தவொரு செயலும், தூய்மை விதிகளின் கீழ் நடவடிக்கைக்கு வழிவகுக்கும்.

இந்த விதிமுறைகள் அங்கீகரிக்கப்பட்ட விற்பனையாளர்கள் மற்றும் நடைபாதை வியாபாரிகளுக்கும் பொருந்தும். அவர்கள் குப்பைகளைச் சேகரிப்பதற்காகக் குப்பைத் தொட்டிகள் அல்லது கழிவுக் கொள்கலன்களை வைத்திருக்க வேண்டும். சேகரிக்கப்பட்ட கழிவுகள் முறையாக அப்புறப்படுத்தப்படுவதையும் உறுதி செய்ய வேண்டும்.

Source: Read Full Article