Nepal Flood: நேபாளம் பெருவெள்ளத்தில் சிக்கிய தமிழர்கள்.. முதற்கட்டமாக 21 பேர் சென்னை வருகை!

Nepal Flood: நேபாளம் பெருவெள்ளத்தில் சிக்கிய தமிழர்கள்.. முதற்கட்டமாக 21 பேர் சென்னை வருகை!
News Image

நேபாளத்தில் நடைபெற்ற வெள்ளப்பெருக்கில் சிக்கிக் கொண்ட 21 தமிழர்கள் பத்திரமாக சென்னை திரும்பினர். அவர்களை விமான நிலையத்தில் அமைச்சர்கள் ஆனந்த், சரத்குமார் ஆகியோர் மீட்டனர்.

நேபாளத்தில் கடும் வெள்ளம்

ஆன்மிகம் மற்றும் வரலாற்று இடங்கள் நிறைந்த நேபாள நாட்டிற்கு உலகம் முழுவதும் இருந்து தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வருகை தருகின்றனர். இதனிடையே கடந்த ஆகஸ்ட் 26ம் தேதி அன்று நேபாள-சீன எல்லைப் பகுதியில் உள்ள லாங்டாங் லிருங் சிகரத்தின் பனிப்பாறை உடைந்ததால்  திரிசூலி ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. நேபாள-திபெத் எல்லைக்கு அருகே இந்த பேரழிவால் ரசுவா மற்றும் தாடிங் மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டது.

நேபாளத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு வீடியோக்கள் உலக நாடுகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. தண்ணீர் வருவதைக் கண்டு மக்கள் உயிர்பயத்தில் ஓடுவதையும், கண நேரத்தில் அனைத்து இடங்களும் நீரில் அடித்துச் செல்லப்படும் காட்சிகளும் காண்பவர்களை பீதியில் ஆழ்த்தியது.

இந்த கோர சம்பவத்தில் ஆகஸ்ட் 28ம் தேதி இரவு 10 மணி நிலவரப்படி 579 பேர் உயிரிழந்துள்ளனர். கிட்டதட்ட 2 ஆயிரத்துக்கும் அதிகமானோர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உள்ளூர், வெளிநாடுகளைச் சேர்ந்தவர்களின் உடல்களை மீட்கும் பணிகளும், உயிருடன் இருக்கும் மக்களுக்கான அடிப்படை தேவைகள் என அனைத்தையும் போர்க்கால அடிப்படையில் நேபாள அரசு மேற்கொண்டுள்ளது.

பத்திரமாக சென்னை திரும்பிய 21 பேர்

இதற்கிடையில் நேபாள நாட்டிற்கு தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த மொத்தம் 106 சுற்றுலாப் பயணிகள் சென்றிருந்தனர். அவர்கள் வெள்ளத்தில் சிக்கியதால் நிலை என்ன தெரியாமல் குடும்பத்தினர் தவித்தனர். முதலமைச்சர் விஜய் அதிகாரிகளுடன் அவசர ஆலோசனை நடத்தினார். பின்னர் ஆதவ் அர்ஜூனா, ராஜ்மோகன், வினோத், தென்னரசு ஆகிய 4 அமைச்சர்களை டெல்லிக்கு அனுப்பி மத்திய அரசுடன் இணைந்து பாதுகாப்பு பணிகளை மேற்கொள்ளவும், தமிழர்களை மீட்கவும் உத்தரவிட்டார்.

இந்த நிலையில் முதற்கட்டமாக 21 தமிழர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டு சென்னை திரும்பியுள்ளனர். நேற்று மதியம் நேபாளத்தில் இருந்து டெல்லி திரும்பிய அவர்கள் பின்னர் இரவு விமானம் மூலம் சென்னைக்கு வருகை தந்தனர். அவர்களை அமைச்சர்கள் ஆனந்த், சரத்குமார் நேரில் சென்று வரவேற்றனர்.

21 பேரில் நெய்வேலியைச் சேர்ந்த திருமாவளவன் செய்தியாளர்களிடம் பேசும்போது, “எங்கள் வேன் ஓரிடத்தில் நிறுத்தப்பட்டிருந்தபோது பெருவெள்ளமும் சேற்று நீரும் பெருக்கெடுத்து ஓடுவதை நாங்கள் எதிர்கொண்டோம். அது தன் வழியில் இருந்த அனைத்து வாகனங்களையும் மற்ற பொருட்களையும் இழுத்துச் சென்றதைப் பார்த்தோம். அதைக் கண்டு நாங்கள் அதிர்ச்சியடைந்து வேனிலிருந்து வெளியே வந்து 10 அடி தூரம் நகர்ந்து விட்டோம். பின்னர் அங்கிருந்து ராணுவ ஹெலிகாப்டர் மூலம் காத்மாண்டுவிற்கு அழைத்து வரப்பட்டோம்" என தெரிவித்தார்.

இதனிடையே நேபாள வெள்ளத்தில் சிக்கி தமிழ்நாடு திரும்ப முடியாமல் தவிக்கும் மற்றவர்களின் நிலை குறித்தும், அவர்களை சென்னை அழைத்து வரவும் தமிழ்நாடு அரசு முழு வீச்சில் செயல்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks