“எங்களை பலவீனப்படுத்த சதியா?” - திமுகவுக்கு எதிராக திருமாவளவன் பேசியது என்ன?

“எங்களை பலவீனப்படுத்த சதியா?” - திமுகவுக்கு எதிராக திருமாவளவன் பேசியது என்ன?
News Image

“விசிகவோட உறவு வேண்டாம் என்ற நோக்கில், விசிகவை எங்களாலும் பலவீனப்படுத்த முடியும் என்ற நோக்கில் கட்சியில் இணைத்துக் கொண்டார்கள்” என்று விசிக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பனையூர் பாபுவை திமுகவில் இணைத்தது குறித்து திருமாவளவன் பேசியுள்ளார்.

தருமபுரியில் விசிக நிர்வாகி இல்ல திருமண விழாவில் விசிக தலைவர் திருமாவளவன் கலந்துகொண்டு மணமக்களுக்கு மாங்கல்யம் எடுத்துக் கொடுத்து திருமணத்தை நடத்தி வைத்தார். இதைத்தொடர்ந்து மணமக்களை வாழ்த்தி பேசினார்.

அப்போது அவர் பேசுகையில், “தன்னுடன் சிலர் வந்தார்கள், நின்றார்கள், சென்றார்கள், என்னுடன் கால் நூற்றாண்டுகளாக களப் பணியாற்றிய தம்பிகள் யாரும் வெளியே செல்லவில்லை. ஒரு தம்பி மட்டும் தான் வெளியே சென்றார். ஒருவர் நம் கட்சிக்கு வருகிறார் என்று சொன்னால் அவரிடம் என்ன சொல்லியிருக்க வேண்டும். எங்களுடன் திருமாவளவன் நீண்ட காலமாக இணைந்து பணியாற்றியுள்ளார். எங்களுக்கு திருமாவளவன் நம்பகத்தன்மை கொண்டவர். அந்த இயக்கத்தை பலவீனப்படுத்த மாட்டோம். விசிக, தவெக -வுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்கள். நீங்கள் எங்கள் கட்சிக்கு வேண்டாம். வேறு ஏதாவது கட்சிக்கு செல்லுங்கள் என்று சொல்லியிருக்கலாம். மீண்டும் விசிகவோட உறவு வேண்டாம் என்ற நோக்கில் விசிகவை எங்களாலும் பலவீனப்படுத்த முடியும் என்ற நோக்கில் கட்சியில் இணைத்துக் கொண்டார்கள். அவர் ஒருவர் மட்டுமே சென்றார். வேறு யாரும் அவரோடு செல்லவில்லை” என விசிக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பனையூர் பாபுவை திமுகவில் இணைத்தது குறித்து திருமாவளவன் பேசினார்.

வைகோவை தொடர்ந்து, திருமாவளவனும் திமுகவுக்கு எதிராக பேசத்தொடங்கியுள்ளார். ஒவ்வொரு நாளும் ஒரு நிலைப்பாடு உடன் திருமாவளவன் பேசி வருவதாக அவர் மீது விமர்சனம் வந்த நிலையில், கடந்த சில நாட்களாக திமுகவை எதிர்த்து பேசி வருகிறார். நேற்றுக்குட, சீமான், உதயநிதி ஸ்டாலின் சிரித்து பேசிக்கொண்டது குறித்தும் திருமாவளவன் குறிப்பிட்டு பேசியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks