Stephen Fleming: தோனியை வெச்சு காலத்தை ஓட்டுனது போதும்..! CSK கோச் ஸ்டீஃபன் ஃப்ளெமிங் ராஜினாமா - அடுத்து யார்?

Stephen Fleming: தோனியை வெச்சு காலத்தை ஓட்டுனது போதும்..! CSK கோச் ஸ்டீஃபன் ஃப்ளெமிங் ராஜினாமா - அடுத்து யார்?
News Image

CSK Coach Stephen Fleming: கடந்த 2023ம் ஆண்டுக்குப் பிறகு சிஎஸ்கே மட்டுமின்றி அந்த ப்ராண்டின் ஒரு ஃப்ரான்சைஸ் கூட, ஸ்டீஃபன் ஃப்ளெமிங்கின் கீழ் கோப்பையை வென்றதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஸ்டீஃபன் ஃப்ளெமிங் ராஜினாமா

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பயிற்சியாளாராக 18 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வந்த, தென்னாப்ரிக்காவைச் சேர்ந்த ஸ்டீஃபன் ஃப்ளெமிங் தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். இதுதொடர்பாக அணி நிர்வாகம் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில், “சூப்பர் கிங்ஸ் அணியும் ஸ்டீபன் ஃபிளெமிங்கும் பரஸ்பரம் பிரிந்து செல்ல முடிவு செய்துள்ள நிலையில், இந்தியன் பிரீமியர் லீக் வரலாற்றில் மிகவும் வெற்றிகரமான மற்றும் நீடித்த கூட்டாண்மைகளில் ஒன்று முடிவுக்கு வந்துள்ளது. ஃப்ளெமிங்கிற்கும் சூப்பர் கிங்ஸ் நிர்வாகத்திற்கும் இடையே நடைபெற்ற தொடர்ச்சியான வெளிப்படையான மற்றும் நேர்மையான கலந்துரையாடல்களைத் தொடர்ந்து, மரியாதையுடனும் நன்றியுடனும் இந்த முடிவு எட்டப்பட்டது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை - ஃப்ளெமிங் கூட்டணி

ஐபிஎல் தொடங்கப்பட்ட ஆண்டான 2008ல், நியூசிலாந்தை சேர்ந்த ஸ்டீஃபன் ஃப்ளெமிங் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் வீரராக களமிறங்கினார். தொடர்ந்து 2009 முதல் அணியின் தலைமைப் பயிற்சியாளராகப் பொறுப்பேற்றார். அடுத்த 17 ஆண்டுகளில் ஃப்ரான்சைஸ் கிரிக்கெட்டில் மிகவும் மதிக்கப்படும் மற்றும் நிலையான கூட்டணியாக இது உருவெடுத்தது. ஃப்ளெமிங்கின் தலைமையில், சிஎஸ்கே 5 ஐபிஎல் கோப்பைகளையும், 2 சாம்பியன்ஸ் லீக் தொடர்களையும் வென்றுள்ளது. இந்த அணி சாதனை அளவாக 12 முறை பிளேஆஃப் சுற்றுக்குத் தகுதி பெற்றதுடன், 10 ஐபிஎல் இறுதிப் போட்டிகளிலும் பங்கேற்றுள்ளது.

குவியும் விமர்சனங்கள்:

ஐபிஎல் வரலாற்றில் வேறு எந்தவொரு அணியாலும் நிகழ்த்த முடியாத பல அரிய சாதனைகளை, ஃப்ளெமிங்கின் பயிற்சியின் கீழ் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிகழ்த்தியுள்ளது.  ஆனால், அவை அனைத்துமே தோனி கேப்டனாக இருந்தபோது மட்டுமே அரங்கேறின. ஜடேஜா மற்றும் ருதுராஜ் கெய்க்வாட் ஆகியோர் கேப்டனாக பொறுப்பேற்றபோது சென்னை அணியால் எதிர்பார்த்த அளவில் சோபிக்க முடியவில்லை. இதனால் ஃப்ளெமிங்கால் சென்னை அணி சாதிக்கவில்லை எனவும், தோனி சாதித்ததை தான் ஃப்ளெமிங் தனக்கான வரலாறாகா மாற்றிக் கொண்டார் என்ற விமர்சனங்களும் அவ்வப்போது குவிந்த வண்ணமே உள்ளன. இதனை உணர்த்தும் விதமாகவே வரலாற்று சான்றுகளும் உள்ளன.

சொதப்பிய ஃப்ளெமிங்..

கடந்த 2022ம் ஆண்டு ஜடேஜா கேப்டனாக பொறுப்பேற்றபோது சென்னை அணி மோசமான செயல்பாட்டை வெளிப்படுத்தியது. அதேநேரம், 2023ம் ஆண்டு தோனி மீண்டும் கேப்டனாக சிஎஸ்கே சாம்பியன் பட்டம் வென்று அசத்தியது. 2024ம் ஆண்டு முதல் ருதுராஜ் கேப்டனாக, கடந்த மூன்று ஆண்டுகளில் ஒருமுறை கூட சாம்பியன் பட்டம் வெல்லவில்லை. குறிப்பாக கடந்த மூன்று சீசன்களில் ஒருமுறை கூட ஃப்ளே-ஆப் சீசனுக்கு கூட சென்னை அணியால் தகுதி பெறமுடியவில்லை. சென்னை அணி மட்டுமின்றி சிஎஸ்கே ஃபிரான்சைஸின் சார்பில் தென்னாப்ரிக்கா 20 மற்றும் மேஜர் கிரிக்கெட் லீக் ஆகியவற்றில் பங்கேற்கும் இரண்டு அணிகளுக்கும் கூட, ஃப்ளெமிங் தான் பயிற்சியாளராக செயல்பட்டு வந்தார். ஆனால், அவற்றில் ஒருமுறை கூட அந்த அணிகள் கோப்பையை வென்றதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்: வழக்குகளை அடுக்கும் TVK, மத்திய அமைச்சராகும் திமுக MP? BJP கூட்டணி? கன்ஃபார்ம் செய்த Ex.அமைச்சர்

புதிய பயிற்சியாளர் யார்?

ஃப்ளெமிங்கின் ராஜினாமாவை தொடர்ந்து சென்னை அணியின் புதிய பயிற்சியாளர் யார்? என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்திய அணியின் முன்னாள் வீரரான ஹேமங் பதானி அந்த பதவிக்கு நியமிக்கப்படலாம் என கூறப்படுகிறது. அணியை முழுமையாக சீரமைக்கும் நோக்கில் சிஎஸ்கே நிர்வாகம் திட்டங்களை வகுத்து வருகிறதாம்.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks