பாஜக தமிழ்நாடு முன்னாள் தலைவர் அண்ணாமலை தனது கட்சி மேலிடத்தின் மீது அதிருப்தியில் உள்ளதாக ஏற்கனவே கூறப்பட்டுவந்த நிலையில், அவர் புதிய கட்சியை தொடங்க இருப்பதாக சமீபத்தில் தகவல் தீயாய் பரவியது. இப்படிப்பட்ட சூழலில், அவர் இன்று டெல்லி புறப்பட்டுச் சென்றுள்ளார். அதன் பின்னணி என்ன என்பதைத் தான் இப்போது பார்க்கப் போகிறோம்.

பாஜக மேலிடம் மீது அதிருப்தியில் இருந்தாரா அண்ணாமலை.?

பாஜக தமிழ்நாடு முன்னாள் தலைவர் அண்ணாமலை, கட்சி மேலிடத்தின் மீது அதிருப்தியில் இருப்பதாக தேர்தலுக்கு முன்பு இருந்தே சொல்லப்பட்டு வருகிறது. அதற்கு காரணம், தேர்தலுக்கு முன், அதிமுக உடன் கூட்டணி அமைப்பதற்காக, இபிஎஸ் உடன் இணக்கமாக இல்லாமல் இருந்த அண்ணாமலையை, மாநில தலைவர் பதவியில் இருந்து தூக்கிவிட்டு, அந்த இடத்தில் அதிமுகவிற்கு இணக்கமாக இருந்த நயினார் நாகேந்திரனை தலைவராக கட்சித் தலைமை நியமித்தது.

அப்போது முதல் பாஜக தலைமை மீது அண்ணாமலை அதிருப்தியில் இருந்தது தேர்தல் பிரசாரத்திலும் எதிரொலித்தது. தேர்தலில் 2 தொகுதிகளுக்கு பொறுப்பாளராக அண்ணாமலையை பாஜக தலைமை நியமித்திருந்தது. ஆனால், அந்த தொகுதிகளுக்கு அவர் செல்லவும் இல்லை, அதற்காக எந்த வேலையையும் பார்க்கவில்லை. பின்னர், பாஜக மேலிடம் அவரை டெல்லிக்கு அழைத்து சமாதானப்படுத்திய பின்னர், சில தொகுதிகளில் மட்டும் பிரசாரத்தை மேற்கொண்டார் அண்ணாமலை.

மேலும், அவர் தேர்தலிலும் போட்டியிட மாட்டேன் என கூறிவிட்டார். அதைத் தொடர்ந்து, தேர்தல் முடிந்த பின்னர் அவர் மீண்டும் தலைமை பதவிக்கு வந்துவிடுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், பாஜக தலைமை அவ்வாறு செய்யவில்லை. மேலும், தேர்தல் குறித்தும், அதன் முடிவுகள் குறித்தும் கட்சிக்கு எதிரான சில கருத்துக்களை அண்ணாமலை பேசியிருந்தார். அதோடு, இன்று டெல்லியில் நடைபெற்ற பாஜகவின் தேசிய நிர்வாகிகள் கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டும் அண்ணாமலை கலந்துகொள்ளவில்லை என கூறப்படுகிறது.

இவை எல்லாவற்றிற்கும் மேலாக, அண்ணாமலையின் ஆதரவாளர்களே, அவர் அதிருப்தியில் இருப்பதை வெளிப்படுத்தி வந்ததோடு, அவரை தனியாக கட்சி தொடங்குமாறும் வலியுறுத்தி வந்துள்ளனர். அதன் எதிரொலியே, அண்ணாமலை கட்சி தொடங்குவதாக வெளியான செய்தி.

புதிய கட்சி குறித்து 2 நாட்களில் அறிவிப்பு.?

இத்தகைய சூழலில், இன்று டெல்லி புறப்பட்டுச் சென்றுள்ளார் அண்ணாமலை. அதற்காக அவர் சென்னை விமான நிலையத்திற்கு வந்தபோது, அவர் பாஜகவிலிருந்து விலகப் போகிறாரா என்றும் புதிய கட்சி தொடங்குவது குறித்தும் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு மறுப்பு ஏதும் சொல்லாத அண்ணாமலை, 2 நாட்களில் அமர்ந்து பேசுவோம், அப்போது உங்கள் எல்லா கேள்விகளுக்கும் பதில் கூறுகிறேன் என்று தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தினார்.

இத்தகைய சூழலில், அண்ணாமலை கட்சி தொடங்குவது உறுதி தான் என்ற தகவல் வெளியாகியுள்ளது. அதற்கான அறிவிப்பைத் தான், டெல்லி சென்று வந்தபின் 2 நாட்களில் அறிவிப்பார் என கூறப்படுகிறது.

அண்ணாமலை டெல்லி சென்றது எதற்காக.?

இதனிடையே, இன்று 2 நாட்கள் பயணமாக டெல்லி புறப்பட்டுச் சென்ற அண்ணாமைலை, அங்கு பாஜக தேசிய தலைவர் நிதின் நபின், அமித் ஷா, நட்டா உள்ளிட்ட முக்கிய தலைவர்களை சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவர்களிடம், தான் புதிதாக கட்சி தொடங்க உள்ளதை தெரிவித்து, பாஜகவிலிருந்து விலக அவர்களது ஒப்பதலைப் பெறவே, அண்ணாமலை டெல்லி சென்றுள்ளதாக கூறப்படுகிறது. இதன் காரணமாகவே, 2 நாட்களில் அனைத்து கேள்விகளுக்கும் விடை தெரியும் என்று கூறிச் சென்றுள்ளார் அண்ணாமலை.

Source: Read Full Article