CM Vijay's Plan: திருச்சி கிழக்கில் ராகவா லாரன்ஸ் போட்டி.? தவெகவின் மாஸ்டர் பிளான்; விஜய் போடும் கணக்கு என்ன.?

CM Vijay's Plan: திருச்சி கிழக்கில் ராகவா லாரன்ஸ் போட்டி.? தவெகவின் மாஸ்டர் பிளான்; விஜய் போடும் கணக்கு என்ன.?
News Image

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் பெரம்பூர், திருச்சி கிழக்கு என, இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டு வென்ற முதலமைச்சர் விஜய், திருச்சி கிழக்கில் ராஜினாமா செய்தார். இந்நிலையில், திருச்சி கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில், தவெக சார்பில் நடிகர் ராகவா லாரன்ஸை களமிறக்க தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் மூலம், அவர் என்ன கணக்கு போடுகிறார் என்பதை இப்போது அலசுவோம்.

திருச்சி கிழக்கு தவெக வேட்பாளர் ராகவா லாரன்ஸ்.?

முதலமைச்சர் விஜய் ராஜினாமா செய்த திருச்சி கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில், தவெக சார்பில் நடிகர் ராகவா லாரன்ஸ் நிறுத்தப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், தனது அரசியல் என்ட்ரி குறித்து, தனது குருநாதரான ரஜினிகாந்திடம் ராகவா லாரன்ஸ் அறிவுரை கேட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. அதைப் பொறுத்து அவரது முடிவு அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முதலமைச்சர் விஜய்யின் கணக்கு என்ன.?

ராகவா லாரன்ஸை பொறுத்தவரை, ஒரு பிரபல நடிகராக அறியப்படும் அதே வேளையில், ஒரு மிகத் தீவிரமான சமூக சேவகராகவும் அறியப்படுகிறார். வாழ்வாதாரத்திற்கு கஷ்டப்படுபவர்கள், மாற்றுத் திறனாளிகள் போன்றோருக்கு அவர் செய்துவரும் ஏராளமான உதவிகள் குறித்த தகவல்கள் அவ்வப்போது வெளியாகி, அவர் மீது மக்களுக்கு ஒரு தனி மதிப்பை உருவாக்கியுள்ளது.

மேலும், ஒரு நடிகர் என்பதையும் தாண்டி, ஒரு மக்கள் சேவகராகவும், நேர்மையான நல்ல மனம் படைத்த மனிதராகவுமே அவர் மக்களின் மனங்களில் அதிக அளவில் பதிந்துள்ளார். இப்படி, மக்களுக்கு நன்கு பரிட்சையமான ராகவா லாரன்ஸை அரசியலுக்கு கொண்டு வந்தால் நன்றாக இருக்கும் என்பதுடன், வெற்றியும் எளிதாகும் என்பது விஜய்யின் கணக்காக இருக்கும் என்று கூறப்படுகிறது.

ஏனென்றால், லஞ்ச ஊழல் அற்ற ஒரு நேர்மையான ஆட்சியை வழங்குவதே தமிழக வெற்றிக் கழகத்தின் இலக்கு என்று முதலமைச்சர் விஜய் கூறி வருகிறார். அந்த வகையிலும் பொருந்தக் கூடியவராக ராகவா லாரன்ஸ் இருப்பதால், மக்கள் அவருக்கு வாக்களிப்பதில் எந்த தயக்கமும் இருக்காது என்பதும் விஜய்யின் மாஸ்டர் பிளானாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

தவெகவிற்கு ஆதரவாக ஏற்கனவே பதிவிட்ட ராகவா லாரன்ஸ்

விஜய்யின் இந்த முடிவு எதேச்சையாக வந்துவிடவில்லை. மே 9-ம் தேதியன்று, தவெகவிற்கு ஆதரவாக ராகவா லாரன்ஸ் தனது எக்ஸ் தளத்தில் ஒரு பதிவை வெளியிட்டார்.

‘மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு‘ என்று தொடங்கும் அந்த பதிவில், மக்கள் ஒரு தீர்ப்பை வழங்கியுள்ளனர். அவர்களின் ஆணையின் மூலம் ஒரு புதிய அரசு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. மக்களின் விருப்பம் மதிக்கப்பட வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.

மேலும், இந்த ஜனநாயக தீர்ப்பை ஆதரித்து மதிக்கும் தலைவர்கள், தொடர்ந்து மக்களின் நன்மதிப்பை பெறுவார்கள். அதற்கு மாறாக, சிக்கல்களையோ, பிளவுகளையோ உருவாக்க முயற்சி செய்பவர்கள், பொதுமக்களின் மிகுந்த அதிருப்தியையே ஈர்ப்பார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அதோடு, இறுதியாக, ஒரு புதிய அரசு அமைவதற்கு வழிவகுக்கும் வகையில் அனைத்து தலைவர்களும் பணியாற்ற வேண்டும் என்றும், மக்களின் தீர்ப்பு எக்காலத்திலும் மதிக்கப்பட வேண்டும் என்றும் ராகவா லாரன்ஸ் கூறியுள்ளார்.

“Makkal Thirpe Mahesan Thirpu”

The people have spoken, and a new government has been chosen through their mandate. The will of the people must be respected. Leaders who support and respect this democratic decision will continue to earn the people’s respect. Those who try to… pic.twitter.com/183nayu6x6
— Raghava Lawrence (@offl_Lawrence) May 9, 2026

விஜய்யுடன் தான் இருக்கும் புகைப்படத்துடன் அவர் இந்த பதிவை வெளியிட்டு, தவெகவிற்கு தனது ஆதரவை வெளிப்படுத்தியிருந்தார். இதன் மூலம், அவர் ஏற்கனவே அரசியலுக்குள் வந்தது போலத்தான். அதையே தற்போது தனக்கு சாதகமாக மாற்றிக்கொள்ள விஜய் பிளான் போட்டுள்ளது போல் தெரிகிறது. விஜய்யின் கணக்கு பலிக்குமா.? என்ன நடக்கிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks