நெல்லை ஆணவக்கொலை விவகாரம்.. கவின் கொலை வழக்கில் ஐபிஎஸ் அதிகாரி நியமனம் – விசாரணை தீவிரம்! Nellai manslaughter case.. IPS officer appointed in Kavin murder case – investigation intensifies

நெல்லை ஆணவக்கொலை விவகாரம்.. கவின் கொலை வழக்கில் ஐபிஎஸ் அதிகாரி நியமனம் – விசாரணை தீவிரம்! Nellai manslaughter case.. IPS officer appointed in Kavin murder case – investigation intensifies

நெல்லை ஆணவக்கொலை விவகாரம்.. கவின் கொலை வழக்கில் ஐபிஎஸ் அதிகாரி நியமனம் – விசாரணை தீவிரம்! 




நெல்லையில் படுகொலை செய்யப்பட்ட ஐ.டி ஊழியர் கவினின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் தூத்துக்குடியில் 2வது நாளாகப் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில்,  கவின் கொலை வழக்கில் சிறப்பு விசாரணை அதிகாரியாக ஐபிஎஸ் அதிகாரி பிரசன்ன குமார் என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுக மங்கலத்தை சேர்ந்தவர் கவின்குமார் என்பவர், சென்னையில் உள்ள ஐடி நிறுவனம் ஒன்றில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். சமீபத்தில் விடுமுறைக்காக ஊருக்கு வந்த கவின்குமார், ஞாயிற்றுக்கிழமையன்று பாளையங்கோட்டையில் உள்ள சித்த மருத்துவமனைக்குத் தனது தாத்தாவை அழைத்துச் சென்றுள்ளார்.

இந்நிலையில் அங்குச் சித்த மருத்துவராகப் பணியாற்றும்  தனது பள்ளித் தோழியான ஒரு பெண்ணுடன் கவினுக்கு நட்பு ஏற்பட்டு காதலாக மாறியுள்ளது. இதற்குப் பெண்ணின் குடும்பத்தில் கடுமையான எதிர்ப்பு எழுந்துள்ளது. நாளடைவில் கவின் அந்தப்பெண்ணை  திருமணம் செய்ய ஆசைப்பட்டதாகவும் கூறப்படுகிறது. 

இந்தக் காதல் விவகாரம், அந்தப் பெண்ணின் அண்ணனான சுர்ஜித்துக்கு பிடிக்காததால் கவினிடம் இதுகுறித்து பேச வேண்டும் என்று கூறி இரு சக்கர  அழைத்துச் சென்றுள்ளார். 

கே.டி.சி நகர் அருகே  அஷ்டலட்சுமி நகர் முதலாவது தெரு அருகே அம்பாள் மருத்துவமனை அருகே வந்தபோது தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் கவின் மீது சுர்ஜித்  தாக்குதல் நடத்தியுள்ளார். இதில் முகம், கை, காலென அனைத்து பகுதிகளிலும் பலத்த காயமடைந்த கவின் சாலையில் விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார்.

கவினை அழைத்துச் சென்று பட்டப்பகலில் வெட்டிப் படுகொலை செய்ததாகப் பெண்ணின் சகோதரர் சுர்ஜித் பாளையங்கோட்டை காவல்நிலையத்தில் சரணடைந்தார். பெண்ணின் பெற்றோரும் காவல் உதவி ஆய்வாளர்களுமான சரவணராஜன், கிருஷ்ணகுமாரியும் அவரது மகன் சுர்ஜித் மீதும் 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. 

இந்நிலையில் கவின் உடலை வாங்க மறுத்துத் தூத்துக்குடியில் உள்ள உறவினர்கள் 2வது நாளாகப் போராட்டத்தில் ஈடுபட்டனர். அரசு வழங்கிய 6 லட்ச ரூபாய் காசோலையை அதிகாரிகள் கொடுக்கச் சென்றபோது, அதனை வாங்க மறுத்துப் பெண்ணின் பெற்றோரைக் கைது செய்வது மட்டுமே அவசியம் என வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து கவின் மற்றும் இளம்பெண் ஒன்றாக உள்ள புகைப்படத்தையும் உறவினர்கள் வெளியிட்ட நிலையில், போலீசார் இதுகுறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் கொலையாளி சுர்ஜித்தை ரகசிய இடத்தில் வைத்துப் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது மாற்றுச் சமூகத்தைச் சேர்ந்த கவின்குமார், சித்த மருத்துவமனையில் பணிபுரிந்து வந்த தனது அக்காவுடன் பழகுவது பிடிக்காததால், அவரை வெட்டிக் கொன்றதாகச் சுர்ஜித் வாக்குமூலம் அளித்துள்ளார்.

அதைத்தொடர்ந்து அவர்களிடம் போலீசார் மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையில் உடன்படாத எடுத்து நீண்ட நேரம் போராட்டம் தொடர்ந்தது. சுமார் 3 மணி நேர போராட்டத்திற்கு பின் பிறகு இந்தப் போராட்டம் முடிவுக்கு வந்தது. 24 மணி நேரத்தில் குற்றவாளியான சுர்ஜித்தின் தாய் மற்றும் தந்தை இருவரையும் கைது செய்வோம் எனப் போலீசார் உறுதி அளித்ததை அடுத்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். 

இந்த வழக்கில், நெல்லையைச் சார்ந்த மென் பொறியாளர் கவின் கொலை வழக்கில் சிறப்பு விசாரணை அதிகாரியாக ஐபிஎஸ் அதிகாரி பிரசன்ன குமார் என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஒரு மணி நேரத்திற்கு மேலாகக் கவின் சகோதரர் பிரவீன் இடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கவின் தொலைபேசியைத் திறப்பதற்காக அவரது சகோதரர் பிரவீன் அழைத்து வரப்பட்டதாகப் போலீசார் தரப்பில் தகவல் வெளியாகியுள்ளது.


கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks