Vetri Veedu Thittam: வீடு கட்ட ரூ.5 லட்சம் மானியம்.. வெற்றி திட்டத்தை அறிவித்த முதல்வர் விஜய்!

Vetri Veedu Thittam: வீடு கட்ட ரூ.5 லட்சம் மானியம்.. வெற்றி திட்டத்தை அறிவித்த முதல்வர் விஜய்!
News Image

தவெக அரசின் பட்ஜெட்டில் புதிய மாநில வீட்டு வசதி திட்டமான வெற்றி வீடு திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசின் பட்ஜெட்டை நிதியமைச்சர் மரிய வில்சன் இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். தமிழக வெற்றிக் கழக அரசின் முதல் பட்ஜெட் என்பதால் மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவியது. இப்படியான நிலையில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கிடையே வெற்றி வீடு திட்டம் அறிமுகம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  நடப்பு நிதியாண்டில் சுமார் 70 ஆயிரம் வீடுகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த திட்டத்திற்காக ரூ.3,500 கோடி மதிப்பிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தில் மிக முக்கியமான விஷயம் என்னவென்றால் வீடு கட்டவதற்கு கடந்த ஆட்சிக்காலத்தில் ரூ.3.50 லட்சம் மானியம் வழங்கப்பட்டது. இதனை தவெக அரசு ரூ.5 லட்சமாக உயர்த்தியுள்ளது.  இதுதொடர்பான அறிவிப்பில், ஊரகப் பகுதிகளில் வாழும் வீடற்ற ஏழைக் குடும்பங்களுக்கு நிலையான வீட்டு வசதியை உறுதி செய்வதற்கு இந்த திட்டம் உதவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த முப்பது ஆண்டுகளாக மாநில மற்றும் மத்திய அரசுகள் பல்வேறு வீட்டுவசதித் திட்டங்களை செயல்படுத்தியிருந்தாலும், தமிழ்நாடு இன்னும் குடிசைகள் அற்ற மாநிலமாக மாறவில்லை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் ஏற்படும் சிக்கலை இந்த திட்டம் தீர்வளிக்கும் எனவும் சொல்லப்பட்டுள்ளது.

ஊரக வளர்ச்சித்துறை மூலம் இந்த திட்டம் மேற்கொள்ளப்படும். அதுமட்டுமல்லாமல் மலைப்பகுதி ஊராட்சிகளின் மேம்பாட்டிற்காக ஆண்டுதோறும் 100 கோடி ரூபாய் ஒதுக்கீட்டில் ஒரு தனித் துணைத்திட்டம் செயல்படுத்தப்படும். தமிழ்நாடு கிராமப்புற அதிகாரமளித்தல், மாற்றம் மற்றும் மறுமலர்ச்சி முன்னெடுப்புத் திட்டம் ஆண்டிற்கு 6,000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் செயல்படுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

முந்தைய அரசில் இருந்த திட்டங்கள்

கடந்த 2011-2016ம் ஆண்டு அதிமுக ஆட்சிக்காலத்தில் அப்போதைய முதலமைச்சரால் கிராமப்புறங்களில் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள ஏழைகளுக்குச் சொந்தமாக வீடு கட்ட முதலமைச்சரின் சூரிய மின்சக்தியுடன் கூடிய பசுமை வீடு திட்டம் தொடங்கப்பட்டது. இதற்காக ₹2.10 லட்சம் முழு மானியமாக வழங்கப்பட்டது. அதன்படி வீடு கட்ட ரூ.1.80 லட்சமும், சூரிய மின்சக்தி விளக்குகள் அமைக்க ரூ.30,000ம் ஒதுக்கப்பட்டது. இந்த வீடுகள் முற்றிலும் இலவசமாகவே பயனாளிகளுக்குக் கட்டித் தரப்பட்டன.

இதனைத் தொடர்ந்து திமுக ஆட்சியில் கலைஞர் வீடு திட்டம் தொடங்கப்பட்டது. இதில் வீடு கட்ட ரூ.3.50 லட்சம் மானியம் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks