தன்னைப்பற்றி வீரலட்சுமி அவதூறு பரப்புகிறார்.. மக்கள் நீதி மையம் பெண் நிர்வாகி சிநேக பிரியா புகார்..! Veeralakshmi is spreading slander about her.. Makkal Justice Center female executive Sneha Priya complains..!

தன்னைப்பற்றி வீரலட்சுமி அவதூறு பரப்புகிறார்.. மக்கள் நீதி மையம் பெண் நிர்வாகி சிநேக பிரியா புகார்..! Veeralakshmi is spreading slander about her.. Makkal Justice Center female executive Sneha Priya complains..!

தன்னைப் பற்றி வீரலட்சுமி அவதூறு பரப்புகிறார்.. மக்கள் நீதி மையம் பெண்நிர்வாகி புகார்..!


தன்னைப் பற்றி அவதூறு பரப்புவதாகத் தமிழர் முன்னேற்றப் படையின் தலைவர் வீரலட்சுமி மீது மக்கள் நீதி மையத்தின் நிர்வாகி சிநேக பிரியா மோகன் தாஸ் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

சமூக ஆர்வலரும், மக்கள் நீதி மையத்தின் நிர்வாகியான சினேக ப்ரியா மோகன்தாஸ், கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னையில் ஆட்டோவில் பயணித்தப்போது, ஆட்டோ டிரைவர் ஒருவருடன் ஏற்பட்ட வாக்குவாதம் சமூக வலைதளத்தில் வைரலானது. இதனையடுத்து, ஆட்டோ ஓட்டுநர் மற்றும் சிநேகபிரிய மோகன் தாஸ் மீதும் புகார் அளிக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது. 

இந்த நிலையில், தன்னை அவமதிக்கும் வகையில் பொது வெளியில் அவதூறு மற்றும் சமூக விரோத கருத்துக்களை பரப்பியதற்காகத் தமிழர் முன்னேற்றப் படையின் நிறுவனர் வீரலட்சுமிக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளார்.

கடந்த ஜூலை 21 ஆம் தேதி பிரெசிடென்சி கல்லூரியில் சிறப்பு விருந்தினராகச் சென்றபோது, ஒரு ஆட்டோ ஓட்டுனருடன் ஏற்பட்ட சண்டை சம்பவம் தொடர்பாக, மைலாப்பூர்  காவல் நிலையத்தில் ஆட்டோ ஓட்டுனர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டதாகவும், அதே நேரத்தில் தன் மீதும் வழக்காகப் பதிவு செய்துள்ளதாகவும் சினேக ப்ரியா புகாரில் தெரிவித்தார்.

இந்தச் சம்பவம் தொடர்பான வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் பரவத் தொடங்கியது. அதன் பின்னர், பலரும் அவதூறான கருத்துக்களை பதிவு செய்துள்ளனர். குறிப்பாக, வீரலட்சுமி என்பவர்  செய்தியாளர்களைச் சந்தித்து அளித்த பேட்டியில், தன்னை விமர்சித்து, நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில்   கீழ்த்தரமான விமர்சனங்களைச் செய்துள்ளார் என்ன குற்றச்சாட்டியுள்ளார்.

மேலும், “இவர் ஒரு தமிழ் பெண் அல்ல; வட இந்தியாவிலிருந்து கள்ள நோக்கத்துடன் வந்தவர்” என்றவாறு, முழுமையாகப் பொய்யான மற்றும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்து, சமூக விரோதப் பேச்சுகள்மூலம் வேறுபாடு கிளப்ப முயற்சித்ததாகவும், இது தன்னுடைய  மரியாதைக்கு கடுமையான பாதிப்பு ஏற்படுத்துவதாகவும் புகாரில் தெரிவித்துள்ளார். இதனையடுத்து, வீரலட்சுமி மீது சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்குமாறு  சினேக ப்ரியா மோகன்தாஸ் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks