ரஷ்யாவில் 8.8 ரிக்டர் நிலநடுக்கம்: பசிபிக் நாடுகளுக்குச் சுனாமி எச்சரிக்கை! 8.8 magnitude earthquake in Russia: Tsunami warning for Pacific countries!

ரஷ்யாவில் 8.8 ரிக்டர் நிலநடுக்கம்: பசிபிக் நாடுகளுக்குச் சுனாமி எச்சரிக்கை! 8.8 magnitude earthquake in Russia: Tsunami warning for Pacific countries!

 ரஷ்யாவில் 8.8 ரிக்டர் நிலநடுக்கம்: பசிபிக் நாடுகளுக்குச் சுனாமி எச்சரிக்கை!

ரஷ்யாவில் ம்சத்கா தீபகற்ப பகுதியில் 8.8 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கத்தை ஏற்பட்டதைத் தொடர்ந்து, பல்வேறு நாடுகளுக்குச் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இதனையடுத்து, ரஷ்யா, ஜப்பான் மற்றும் அமெரிக்க சுனாமி எச்சரிக்கை மையத்திலிருந்து சுனாமி எச்சரிக்கை விடப்பட்டது. 


ரஷ்யாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தை அடுத்து ரஷ்யா மற்றும் ஜப்பான் நாடுகளின் கடலோர பகுதிகளில் சுனாமி அலைகள் தாக்கின.  கடற்கரை பகுதிகளில், 13 அடி உயரத்திற்கு கடல் அலைகள் எழும்பின. இதைத் தொடர்ந்து ஜப்பான், ரஷ்யா, அமெரிக்காவின் ஹவாய் கடலோர பகுதிகள், ஆஸ்திரேலியா, பிலிப்பைன்ஸ் நாடுகளுக்கும் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. செவெரோ-குரில்ஸ்கில் வசிப்பவர்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு அதிகாரிகள் வலியுறுத்தியதால், அங்கு வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு வெளியேற்றப்பட்டனர். வடமேற்கு ஹவாய் தீவுகள் மற்றும் ரஷ்யாவின் குரீல் தீவு பகுதிகளில் கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது. இதனால், ஹவாய், சாலமன் தீவு, ஜப்பான் உள்ளிட்ட இடங்களில் 3 மீட்டர் உயரத்திற்கு சுனாமி அலைகள் எழுந்ததால் பொதுமக்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர்.  


ரஷ்யாவில் ஏற்பட்ட இந்தச் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் சர்வதேச அளவில் கடந்த 2011 ஆம் ஆண்டுக்குப் பிறகு மிகவும் மோசமான நிலநடுக்கம்  ரிக்டர் அளவுகோலில் 8.8 ரிக்டர் அளவில் பதிவாகியதாகத் தகவல் வெளியாகியுள்ளது.  இந்தச் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் நான்கு மீட்டர் உயரம் வரை சுனாமி அலைகள் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தால், அப்பகுதியில் இருக்கக்கூடிய ஏராளமான உயர்ந்த கட்டிடங்கள் குலுங்கியது.

அமெரிக்கா வெளியிட்டுள்ள தரவுகளின்படி, இந்த நிலநடுக்கம் 19.3 கிமீ (12 மைல்) ஆழத்தில், அவாச்சா விரிகுடாவின் கடற்கரையில் 165,000 மக்கள் வசிக்கும் பெட்ரோபாவ்லோவ்ஸ்க்-கம்சாட்ஸ்கியின் கிழக்கு-தென்கிழக்கில் 126 கிமீ (80 மைல்) தொலைவில் உருவானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள பகுதிகளிலிருந்து உடனடியாக வெளியேற இந்தியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.சுனாமி எச்சரிக்கைகுறித்து சான் பிரான்சிஸ்கோவில் உள்ள இந்திய துணை தூதரகம் கண்காணித்து வருகிறது. தொடர்ந்து, அமெரிக்க அவசரநிலை மேலாண்மை மையத்தின் எச்சரிக்கைகளை இந்தியர்கள் பின்பற்ற வேண்டும் என்றும், சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள பகுதிகளிலிருந்து உடனடியாக வெளியேற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. சான் பிரான்சிஸ்கோ துணை தூதரகத்தின் சார்பில்,  +1-415-483-6629 என்ற உதவி எண்ணை இந்தியர்கள் தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பசிபிக் தீவுகள் மற்றும் அமெரிக்கா முழுவதும் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், இந்தியாவுக்கு சுனாமி ஆபத்து இல்லை என்று பெருங்கடல் தகவல் சேவைகளுக்கான இந்திய தேசிய மையம் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.




கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks