நெல்லை கவின் ஆணவ படுகொலை வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்.. டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவு! Nellai Kavin's honor killing case transferred to CBCID.. DGP Shankar Jiwal orders

நெல்லை கவின் ஆணவ படுகொலை வழக்கு சிபிசிஐடிக்கு  மாற்றம்.. டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவு! Nellai Kavin's honor killing case transferred to CBCID.. DGP Shankar Jiwal orders

நெல்லையில் ஐடி ஊழியர் கவின் ஆணவ படுகொலை வழக்கு விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்றித் தமிழக டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். 

தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த ஐடி ஊழியரான கவின் செல்வகணேஷ் கடந்த 27ஆம் தேதி திருநெல்வேலியில் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். இந்தக் கொலை சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய நிலையில், போலீசார் நடத்திய நிலையில் பல தகவல் கிடைத்தது. 

துாத்துக்குடி அருகே ஆறுமுகமங்கலத்தை சேர்ந்த பள்ளி ஆசிரியை தமிழ்ச்செல்வியின் மகன் கவின் 27. சென்னை துரைப்பாக்கத்தில் ஐடி நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். துாத்துக்குடியில் தனியார் பள்ளியில் படித்தபோது உடன் படித்த மாற்று சமூகத்தைச் சேர்ந்த மாணவியுடன் காதல் ஏற்பட்டது. அந்தப் பெண் திருநெல்வேலி தனியார் மருத்துவமனையில் சித்த மருத்துவராகப் பணிபுரிந்து வருகிறார்.

கவின் வேறு சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால்,  இவர்களின் காதலுக்கு பெண்ணின் குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் பெண்ணின் தம்பி சுர்ஜித் கவினை கொலை செய்திருப்பது தெரியவந்தது.

சுர்ஜித்தை போலீசார் கைது செய்து குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்தனர்.  இதனையடுத்து பாளையங்கோட்டை போலீசார் எஸ்.சி/ எஸ்.டி சட்டப்பிரிவு உட்பட 6 பிரிவுகளின் கீழ் பெண்ணின் பெற்றோர்களான உதவி ஆய்வாளர்கள் தந்தை சரவணன், அவரது மனைவி கிருஷ்ணகுமாரி, அவரது மகன் சுர்ஜித் மீது வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர். தமிழக காவல்துறையில் பணியாற்றும் உதவி ஆய்வாளர்கள் சரவணன் மற்றும் கிருஷ்ணகுமாரி ஆகிய இருவரையும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். 

இதற்கிடையே கொலைக்குக் காரணமான பெண்ணின் பெற்றோர்கள் கைது செய்யப்பட வேண்டும் எனவும் சிபிஐக்கு வழக்கை மாற்ற வேண்டும் எனவும் கூறி கொலை செய்யப்பட்ட கவினின் உடலை அவரது பெற்றோர்கள் வாங்காமல் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

இந்நிலையில் கவின் கொலை வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றித் தமிழக டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். இவ்வழக்கின் தன்மை மற்றும் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டும், சுதந்திரமான, நியாயமான மற்றும் பாரபட்சமற்ற விசாரணையை உறுதி செய்வதற்காக இந்த வழக்கானது சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளதாகத் தமிழக காவல்துறை தெரிவித்துள்ளது.

இதனிடையே இந்த வழக்கில் குற்றவாளி சுர்ஜித் தந்தையான எஸ்.ஐ., சரவணனை போலீசார் கைது செய்துள்ளதாக நெல்லை மாநகர காவல்துறை தெரிவித்துள்ளது. 

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks