அரியலூரில் அரசு பேருந்தில் கத்தியுடன் இளைஞர் மீது தாக்குதல் இணையத்தில் வீடியோ வைரல்.. ஒருவர் கைது! Video of youth attacked with knife in government bus in Ariyalur goes viral on the internet.. One person arrested!

அரியலூரில் அரசு பேருந்தில் கத்தியுடன் இளைஞர் மீது தாக்குதல்  இணையத்தில் வீடியோ வைரல்.. ஒருவர் கைது! Video of youth attacked with knife in government bus in Ariyalur goes viral on the internet.. One person arrested!

 அரியலூரிலிருந்து ஜெயங்கொண்டம் செல்லும் பேருந்தில் ஏறிய நபரை நான்கு பேர் கொண்ட கும்பல் தாக்கிய சம்பவத்தில் தொடர்புடைய ஒருவரை போலீசார் கைது செய்தனர் மேலும் மூன்று பேரைப் போலீசார் தேடி வருகின்றனர்.


அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகே இறவாங்குடி கிராமத்தைச் சேர்ந்த சிவகுமார் தனது இருசக்கர வாகனத்தில் தனது ஊருக்குத் திரும்பிக் கொண்டிருக்கும்போது முன்னூரான்காடுகாடுவெட்டி பஸ் நிறுத்தம் அருகே வண்டியை நிறுத்தி ஓய்வெடுத்ததாகக் கூறப்படுகிறது. அப்போது அங்கே  மது அருந்திக் கொண்டிருந்தவர்களைச் சிவக்குமார் வீடியோ எடுத்ததாகக் கூறப்படுகிறது. 

இதனைப் பார்த்து மது அருந்திக் கொண்டிருந்தவர்கள் எதற்காக வீடியோ எடுக்கிறாய் என்று கேட்டுள்ளனர். இதில் ஏற்பட்ட தகராறில் சிவகுமார் தனது கைபேசி மூலம் வீடியோ எடுப்பது தன்னுடைய வழக்கம் எனவும் இதைச் சமூக வலைதளங்களில் பதிவிடுவதாகவும் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. 

இதனால்  இருவருக்கும் வாய் தகராறு ஏற்பட்ட நிலையில் இதனைத் தனது கைபேசியில் மீண்டும் சிவகுமார் வீடியோ எடுத்துள்ளார். இதைக் கண்ட அந்த நபர்கள்  சிவகுமாரை தாக்கியுள்ளனர். 

அப்போது அவ்வழியாக வந்த பேருந்தில் ஏறிச் செல்ல முயற்சித்துள்ளார். அப்போது 4 இளைஞர்கள் அந்த நபரைப் பேருந்தின் உள்ளே புகுந்து இரும்பு கம்பியால்  அடித்துத் தாக்கியுள்ளனர்.  இதில் காயமடைந்த சிவக்குமார்  ஜெயங்கொண்டம் மாவட்ட அரசுத் தலைமை பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். 



பேருந்தில் ஏறி இரண்டு பேர் சேர்ந்து ஒருவரை தாக்கும் வீடியோ காட்சி சமூக வலைதளத்தில் வைரலானது.

இதுகுறித்து உரிய விசாரணை நடத்தி தாக்கிய நபர்களைக் கைது செய்ய வேண்டும் எனச் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்திய நிலையில் இச்சம்பவம் குறித்து ஆண்டிமடம் போலீஸ் இன்ஸ்பெக்டர் நடராஜன் வழக்குப் பதிவு செய்து நடத்திய விசாரணையில் சிவக்குமாரை தாக்கிய ஆண்டிமடம் அருகே முன்னூரான் காடுவெட்டி  கிராமத்தைச் சேர்ந்த வினோத்குமார் (23) என்பவரைப் போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். 

இந்தத் தகராறில் மேலும் தப்பி ஓடிய அதே  பகுதியைச் சேர்ந்த கார்த்திக், எலி என்கின்ற சின்னராஜ், செல்வமணி உள்ளிட்ட மூன்று பேரைப் போலீசார் தேடி வருகின்றனர்

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks