பெருங்குடி ரயில் நிலையத்தின் பெண்ணிடம் செயின் பறிப்பு – 3 மணி நேரத்தில் திருடனை பிடித்த ரயில்வே போலீசார்!
சென்னை பெருங்குடி ரயில் நிலையத்தில் ரயில் பணயம் மேற்கொள்ள நடைபாதையில் காத்திருந்த பெண்ணின் கழுத்தில் இருந்த தங்க செயினை பறித்துச் சென்ற இளைஞரை ரயில்வே போலீசார் கைது செய்தனர்.
சென்னை கோட்டூர்புரத்தை சேர்ந்த 40 வயதான ரோசி என்பவர் சென்னை வேளச்சேரியில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியையாகப் பணியாற்றி வருகிறார். நேற்று பணி முடிந்து மாலை அவர் வீடு செல்வதற்காகத் தரமணி ரயில் நிலையம் சென்று அமர்ந்துள்ளார். ரயில் நிலைய நடைபாதையில் இருக்கையில் அமர்ந்திருந்த பள்ளி ஆசிரியை அருகில் வந்த இளைஞர் ஒருவர் இங்கே அமராலாமா என்று கேட்டுள்ளார். அந்த இளைஞரைப் பார்த்ததும் சந்தேகம் வரவே அவரிடம் திருப்பி எந்த ஒரு வார்த்தையும் பள்ளி ஆசிரியை பேசாமல் திரும்பிக்கொண்டிருந்தார்.
கண்ணிமைக்கும் நேரத்தில் நடைபாதையில் காத்திருந்த பெண்ணின் அருகில் அமர்ந்து இருந்த இளைஞர் சற்றும் எதிர்பாராத நேரத்தில் யாருமில்லாததை நோட்டமிட்டு பெண்ணின் கழுத்தில் அணிந்து இருந்த மூன்று சவரன் தங்க செயினை பறித்துக் கொண்டு தப்பி ஓடினார்.
தனது கழுத்தில் அறிந்திருந்த தங்க செயினை இளைஞர் ஒருவர் பறித்துக் கொண்டு தப்பி ஓடியதும் கத்தி கூச்சலிட்டும் அந்த இளைஞர் ரயில் நிலையத்திலிருந்து கண்ணிமைக்கும் நேரத்தில் தப்பி ஓடித் தலைமறைவாகியுள்ளார்.
பட்டப்பகலில் ரயில் நிலையத்தில் அமர்ந்து இருந்த பெண்ணின் கழுத்தில் அணிந்து இருந்த தங்க செயினை இளைஞர் பறித்துக்கொண்டு ஓடும் சிசிடிவி காட்சி சமூக வலைதளங்களில் வெளியாகிப் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இச்சம்பவம் குறித்து திருவான்மியூர் ரயில்வே போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் தரமணி ரயில் நிலையத்தில் பெண்ணிடம் செயின் பறிப்பில் ஈடுபட்ட இளைஞரைத் திருவான்மியூர் ரயில்வே போலீசார் கைது செய்து ரயில்நிலைய காவல் நிலையத்தில் வைத்து விசாரணை மேற்கொண்ட நிலையில், மூன்று மணி நேரத்தில் திருடனை பிடித்த ரயில்வே காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கைதுச் செய்யப்பட்டவர், விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த பாபாஜி என்கிற சௌந்தர் (வயது28) என்பவரைப் போலீசார் கைது செய்துள்ளர். கைது செய்யப்பட்ட இவர்மீது மறைமலை நகரில் மொபைல் பறிப்பு வழக்கு ஒன்று உள்ளது.
பெருங்குடி ரயில் நிலையத்தில் மதிய வேளையில் தனியாக இருந்ததால் பேச்சு கொடுத்துக் கைவரிசை காட்டியதாக வாக்குமூலம் அளித்துள்ளார். தான் மீன் வியாபாரம் செய்வதாகவும் மனைவியைப் பிரிந்த தனியாக இருப்பதால் தன்னுடன் வருமாறு பெண்ணிடம் பேச்சு கொடுத்துக் கைவரிசை காட்டியதாகவும் போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.
பட்டப்பகலில் பெண் அணிந்திருந்த நகையை இளைஞர் திருடிச் சென்ற சம்பவம் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.