Tamilnadu Rain: நீலகிரி, கோவையில் கனமழை எச்சரிக்கை! சென்னையின் நிலை என்ன? நவம்பர் 13 முதல் தரமான சம்பவம் இருக்கு!

Tamilnadu Rain: நீலகிரி, கோவையில் கனமழை எச்சரிக்கை! சென்னையின் நிலை என்ன? நவம்பர் 13 முதல் தரமான சம்பவம் இருக்கு!
News Image

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து பல்வேறு மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இந்நிலையில் சுமார் 0.9 கி.மீ. உயரத்தில் தெற்கு கேரள கடலோர பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளிலிருந்து  கர்நாடக கடலோர பகுதிகளுக்கு அப்பால் உள்ள மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகள் வரை ஒரு காற்றழுத்த தாழ்வு பாதை நிலவுகிறது.

இதன் காரணமாக இன்று கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய கன மழை பெய்யக்கூடும்.

எந்தெந்த மாவட்டங்களில் மழை

அதேபோல் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, திருச்சி, அரியலூர், பெரம்பலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், ஈரோடு, திருப்பூர், திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தேனி, தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் அநேக இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் மழை குறித்து தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் முக்கிய அப்டேட் கொடுத்துள்ளார்.

சென்னையில் மழை எச்சரிக்கை

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளத்தில்: கிழக்கு திசையிலிருந்து காற்று தடையின்றி வீசுவதால், இன்றும் தமிழகத்தின் உட்புற மாவட்டங்களிலும் தெற்கு மாவட்டங்களிலும் மழை பெய்ய வாய்ப்புள்ளது. கடந்த இரண்டு நாட்களை போலவே, மிதமான மழையுடன் சில இடங்களில் பலத்த மழையும் பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளார்.

மேலும் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களின் உட்புறப் பகுதிகளில் திடீர் மழை பெய்ய வாய்ப்புள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கோயம்புத்தூர், வேலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, சேலம் மற்றும் கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களின் உட்புறப் பகுதிகளில் நல்ல மழை பதிவாகியுள்ளது.

நவம்பர் 13 குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி

அதேபோல் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களின் உட்புறப் பகுதிகளிலும் மிதமான மழையும், சில இடங்களில் பலத்த மழையும் பதிவாகியுள்ளது என தெரிவித்துள்ளார். இதனிடையே வங்கடக்கடலில் நவம்பர் 13ம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. வடகிழக்கு பருவமழை தொடங்கிய பிறகு இது 4வது காற்றழுத்த தாழ்வு பகுதி இதுவாகும்.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks