MK Stalin On CM Vijay: தமிழ்நாட்டில் விரைவில் மீண்டும் திமுக ஆட்சி வரும் என, அக்கட்சி தலைவர் ஸ்டாலின் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

”வெட்கமாக இருக்கிறது..”

சென்னை நீலாங்கரையில் நடைபெற்ற கே.என். நேரு இல்ல திருமண விழாவில் திமுக தலைவர் ஸ்டாலின் பங்கேற்று வாழ்த்துரை நிகழ்த்தினார். அப்போது பேசுகையில், “தனக்கு முன்பாக பேசிய நிர்வாகிகள் இப்போது தங்களுக்கு திமுக தலைவர் தான் முதலமைச்சர் என குறிப்பிட்டனர். ஆனால் தற்போது இருகக் கூடிய ஆட்சியின் சூழலுக்கு மத்தியில் இப்போதும் ஸ்டாலின் தான் முதலமைச்சர் என சொல்லாதீர்கள் எனக்கு வெட்கமாக இருக்கிறது. இனிமேல் அப்படி சொல்லாதீர்கள், ஏனென்றால் ஒரு மோசமான ஆட்சி தற்போது நடைபெற்று வருகிறது. விரைவில் நமது ஆட்சி உதயமாக தான் போகிறது. கலைஞரும், நேருவும் பிரிக்க முடியாத நெருக்கமான உறவை கொண்டிருந்தார்கள். அதேபோன்று பெருமையாக சொன்னால் என்னையும் நேருவையும் கூட யாராலும் பிரிக்க முடியாது.

நேருவை பாராட்டிய ஸ்டாலின்

கலைஞரின் மறைவுக்குப் பிறகு இந்த கட்சி நிலைக்குமா? மீண்டும் நிலைநிறுத்தமுடியுமா? என்றெல்லாம் சிலர் கனவு கண்டார்கள். ஆனால் அவையெல்லாம் வீழ்த்தப்பட்டு இன்று கழகம் என்னுடைய தலைமையில் வீறுநடை போடுகிறது என்றால், அதற்கு நான் மட்டுமல்ல எனக்கு துணையாக இருந்த நேரு போன்றவர்களும் காரணம். கட்சியில் படிப்படியாக உயர்ந்து வந்தவர் நேரு. எல்லோரும் சொல்வாகள் மாநாடு என்றால் நேரு என்று. ஆனால், நேரு என்றாலே மாநாடு தான் நினைவுக்கு வருகிறது. இதை பல இடங்களில் தலைவரே சொல்லி இருக்கிறார்.

இதையும் படியுங்கள்: TN Govt: விவசாயிகள், ஆசிரியர்கள் மீதான வழக்குகளை திரும்பப் பெற்று CM விஜய் அதிரடிஉத்தரவு - 92,000 பேர்

”வெத்துவேட்டு சீன் ஆட்சி”

விரைவில் திருச்சி மாவட்டத்தில் திருச்சி கிழக்கில் இடைத்தேர்தல் வரப்போகிறது. அந்த இடைத்தேர்தலில், ஆறு மாத காலமாக தமிழ்நாட்டில் ஒரு ஆட்சி நடைபெற்று வருகிறது. அதை ஆட்சி என்று சொல்ல முடியாது காட்சியாக தான் நடைபெற்று கொண்டிருக்கிறது. வெத்துவேட்டாக சீன் காட்டுவதை போன்ற ஒரு ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. மாற்றம் மாற்றம் என்று சொன்னாகள். ஆனால் தமிழ்நாட்டு மக்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றமாக தான் அமைந்துள்ளது. திரையிலே கதாநாயகனாக நடித்து, இன்றைக்கு உண்மையில் வில்லனாக உலா வந்து கொண்டிருப்பவர் தான் இன்றைய முதலமைச்சர்.

விரைவில் திமுக ஆட்சி

எங்கு பார்த்தாலும் பாலியல் கொடுமைகள் எல்லாம் நடந்து கொண்டிருக்கிறது. அதற்கு காரணமாக இருப்பவர்கள் பெரும்பாலும் ஆளும்கட்சியை சேர்ந்தவர்களாக உள்ளனர். இன்றைய தவெகவிற்கு பாலியல் சுரண்டல் கழகம் என்று தான் பெயர் வைக்க வேண்டும். தூயசக்தி தூயசக்தி என்று சொல்லி ஒரு கொடுமையான ஆட்சி நடைபெற்று கொண்டிருக்கிறது. கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் விவகாரத்தில் சொல்லப்படும் சம்பவமே நடைபெறவில்லை என ஒரு அமைச்சர் சொல்கிறார். புகார் கொடுத்தால் விசாரணை செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என மற்றொரு அமைச்சர் சொல்கிரார். இதற்கெல்லாம் முடிவு கட்ட விரைவில் ஒரு நல்ல சூழல் அமையவிருக்கிறது. அதற்கு நாம் இப்போதிலிருந்தே தயாராக வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்” என திமுக தலைவர் ஸ்டாலின் பேசினார்.

Source: Read Full Article