சர்வதேச சந்தையில் நிலவும் பொருளாதார மாற்றங்கள் காரணமாக தங்கம் விலை தொடர்ந்து சரிவை சந்தித்து வருகிறது. அதாவது நவம்பர் 10-ம் தேதி ஒரு சவரன் தங்கம் ரூ.1,05,680-க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், நவம்பர் 11ம் தேதி ரூ.1,04,120 ஆகவும், நவம்பர் 12-ம் தேதி ரூ.1,02,520 ஆகவும், நவம்பர் 13ம் தேதி ரூ.1,01,560 படிப்படியாகக் குறைந்தது. 5 நாட்களில் மட்டுமே சவரனுக்கு ரூ.5,120 குறைந்துள்ளது நகை பிரியர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதன் மூலம் தங்கம் மீண்டும் ஒரு லட்சம் ரூபாய்க்குக் கீழ் செல்லுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்நிலையில் இன்று தங்கம் விலை உயர்ந்ததா? குறைந்ததா? என்பதை பார்க்கலாம்.

நேற்று விலையில் மாற்றம் இல்லை

நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் தங்கம் விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் இருந்தது. அதாவது சவரன் ரூ.1,00,920ஆக விற்பனை செய்யப்படுகிறது. 22 கேரட் தங்கம் கிராம் ரூ.12,615ஆக விற்பனையானது.

நகைப்பிரியர்கள் ஹேப்பி

இந்நிலையில் இன்றைய (நவம்பர் 16) நிலவரப்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.600 குறைந்து ரூ.1,00,320ஆக விற்பனை செய்யப்படுகிறது. 22 கேரட் தங்கம் கிராமுக்கு ரூ.75 குறைந்து ரூ.12,540ஆக விற்பனையாகிறது. 24 கேரட் தங்கம் கிராம் ஒன்றுக்கு ரூ.13,680ஆக விற்பனையாகிறது. சவரன் ரூ.109,440ஆக விற்பனையாகிறது. தொடர்ந்து தங்கம் சரிவை சந்தித்து வருவதால் நகைக்கடைகளில் கூட்டம் அலைமோதுகிறது.

சரியும் வெள்ளி

கடந்த இரண்டு நாட்களாக வெள்ளி விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் நிலையில் இன்று கிராமுக்கு ரூ.5 குறைந்துள்ளது. அதாவது ஒரு கிராம் விலை ரூ.190க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் ஒரு கிலோ வெள்ளி ரூ.1,90,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Source: Read Full Article