Magalir Urimai Thogai: தீபாவளிக்கு முன் மகளிர் உரிமைத் தொகை? நாளை வங்கி கணக்கில் வரவு?

Magalir Urimai Thogai: தீபாவளிக்கு முன் மகளிர் உரிமைத் தொகை? நாளை வங்கி கணக்கில் வரவு?
News Image

கடந்த திமுக ஆட்சியில் தேர்தல் வாக்குறுதியாக மகளிருக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து 2023ம் ஆண்டு செப்டம்பர் 15ம் தேதி மகளிர் உரிமைத் தொகை திட்டம் அப்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலினால் தொடங்கி வைக்கப்பட்டது. மொத்தமாக 1 கோடியே 31 லட்சம் பேருக்கு மகளிர் உரிமை தொகையானது ஒவ்வொரு மாதமும் 15ம் தேதி அவரவர் வங்கி கணக்கில் ரூ.1000 வரவு வைக்கப்பட்டு வருகிறது.

மகளிர் உரிமைத் தொகை

இத்திட்டத்தால் பெண்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதை அடுத்து பல்வேறு மாநிலங்களும் தமிழக அரசை பின்பற்றி வெவ்வேறு பெயர்களில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் தவெக வெற்றி பெற்றதை அடுத்து தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு முதல்வராக விஜய் பொறுப்பேற்றுக்கொண்டார். அவர் தேர்தல் வாக்குறுதியாக மகளிருக்கு ரூ.1000யிலிருந்து ரூ.2500 உயர்த்தப்படும் என அறிவிப்பை வெளியிட்டிருந்தார். ஆனால் நிதி நெருக்கடி மற்றும் மகளிர் உரிமைத் தொகுதியில் சில விதிமுறைகளை மாற்றம் செய்யப்பட உள்ளதால் தற்போது வரை ரூ.1000 மட்டுமே வரவு வைக்கப்பட்டு வருகிறது.

இதையும் படிங்க: தீபாவளி சர்ப்ரைஸ்.. ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு.. நவம்பர் 4,5 தேதிகளில்.!

தீபாவளி பண்டிகை

இந்நிலையில் நவம்பர் மாதம் 8ம் தேதி ஞாயிற்றுக்கிழமை தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. தீபாவளிக்கு இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில் ஆடைகள், மளிகைப் பொருட்கள் மற்றும் பிற அத்தியாவசிய செலவுகளை சமாளிக்க மகளிர் உரிமை தொகை எப்போதும் போல 15ம் தேதி இல்லாமல் முன்கூட்டியே வரவு வைத்தால் உதவியாக இருக்கும் என பயனாளிகள் கோரிக்கை விடுத்து வந்தனர். இதுதொடர்பாக தமிழக அரசும் பரிசீலித்து வருவதாக தகவல் வெளியானது.

இதையும் படிங்க: Diwali Special Train: தீபாவளிக்கு சொந்த ஊருக்கு போறீங்களா? சிறப்பு ரயில்கள் அறிவிப்பு! எந்தெந்த ஊர்களுக்கு! முழு விவரம்!

இந்நிலையில் தீபாவளிக்கு இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில் நாளை வெள்ளிக்கிழமை மகளிர் உரிமைத் தொகை ரூ.1000 வரவு வைக்கப்படுமா என்று எதிர்பார்த்து வருகின்றனர். நாளை தவறினால் சனிக்கிழமை வங்கிகள் இயங்கும் பட்சத்தில் வரவு வைக்கப்பட வாய்ப்புள்ளது.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks