Karthigai: "சுவாமியே... சரணம் ஐயப்பா.." பிறந்தது கார்த்திகை மாதம்! காலை முதல் மாலை அணியும் பக்தர்கள்!

Karthigai: "சுவாமியே... சரணம் ஐயப்பா.." பிறந்தது கார்த்திகை மாதம்! காலை முதல் மாலை அணியும் பக்தர்கள்!
News Image

தமிழ் மாதங்களில் ஒவ்வொரு மாதமும் தனிச்சிறப்பு வாய்ந்ததாக இருக்கும். அந்த வகையில் மிகவும் முக்கியமான மாதங்களில் ஒன்று கார்த்திகை மாதம்.

பிறந்தது கார்த்திகை:

ஆன்மீக மனம் நிறைந்த இந்த கார்த்திகை மாதம் நடப்பாண்டில் இன்று பிறந்துள்ளது. கார்த்திகை மாதம் என்றாலே அனைவரது நினைவுக்கும் முதலில் வருவது கார்த்திகை தீபமும், ஐயப்பனுமே ஆகும். இன்று கார்த்திகை தீபம் பிறந்ததை முன்னிட்டு பக்தர்கள் காலை முதலே ஐயப்பனுக்கு மாலை அணிந்து வருகின்றனர்.

கடந்த ஒரு வார காலமாக இதற்காக ஐயப்ப பக்தர்கள் தயாராக இருந்து வந்த நிலையில், இன்று அதிகாலையிலே எழுந்து நீராடி கோயில்களில் சென்று பயபக்தியுடன் மாலை அணிந்து கொண்டனர். இதற்காக காலை முதலே கோயில்களில் அலைகடலென பக்தர்கள் கோயில்களில் திரண்டனர். ஐயப்பனுக்கு மட்டுமின்றி முருகப்பெருமானுக்கும் இந்த மாதத்தில் ஏராளமான பக்தர்கள் மாலை அணிவார்கள் என்பதால் முருக பக்தர்களும் இன்று காலை முதல் மாலை அணிந்தனர்.

சிவ பக்தர்கள் உற்சாகம்:

ஐயப்ப பக்தர்களும், முருக பக்தர்களும் மாலை அணிந்து கார்த்திகை மாத விரதத்தைத் தொடங்க மறுமுனையில் சிவ பக்தர்கள் கார்த்திகை தீப கொண்டாட்டத்திற்காக தயாராகி வருகின்றனர். கார்த்திக மகாதீபத்திற்கான கொடியேற்றம் நேற்று தொடங்கிய நிலையில், வரும் 24ம் தேதி மகாதீபம் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் திருவண்ணாமலையில் மிகவும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

காய்கறி, பழங்கள், பூக்கள் விற்பனை அமோகம்:

கார்த்திகை மாதம் பிறந்துள்ளதால் தமிழ்நாட்டில் லட்சக்கணக்கான பக்தர்கள் ஐயப்பனுக்கும், முருகனுக்கும் மாலை அணிந்து விரதம் இருப்பார்கள் என்பதால் இந்த மாதம் இறைச்சி விற்பனை பெரியளவில் மந்தமாகவே இருக்கும். இன்றே இறைச்சி கடைகளில் வியாபாரம் சற்று மந்தமாகவே இருந்தது. அதேசமயம், காலை முதல் காய்கறிகள், பழங்கள், பூக்கள் விற்பனை வழக்கத்தை விட அதிகளவு விற்பனையாகி வருகிறது.

மாலைகளை கோயில்களிலே பெரும்பாலான பக்தர்கள் அணிவார்கள் என்பதால் பெரிய கோயில்கள் முதல் சிறிய கோயில்கள் வரை பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. மேலும், கார்த்திகை மாத முதல் நாள் என்பதால் கோயில்களில் சிறப்பு ஆராதனையும், பூஜையும் நடைபெற்றது. கார்த்திகை மாதம் பிறந்துள்ளதை முன்னிட்டு மாலை விற்பனையும் படுஜோராக நடந்து வருகிறது.

கார்த்திகை தீபத்திருவிழா தொடங்கியிருப்பதை முன்னிட்டு முக்கிய புண்ணிய தலங்களில் பக்தர்கள் கூட்டம் அதிகரிக்கும் என்பதால் அதற்கு ஏற்ப போக்குவரத்து ஏற்பாடுகள், பக்தர்களின் பாதுகாப்பு ஏற்பாடுகள் ஆகியவற்றை கருத்தில் கொண்டு கூடுதல் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.  கார்த்திகை மாதத்தை முன்னிட்டு சபரிமலைக்கு பக்தர்கள் அதிகளவு குவிவார்கள் என்பதால் அங்கும் ஏற்பாடுகள் அதிகரித்து வருகிறது.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks