உத்தரகாண்டில் உள்ள ரிஷிகேஷ் - பத்ரிநாத் தேசிய நெடுஞ்சாலையில் பயணித்த பேருந்து, பாலத்தில் இருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 8 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளான பேருந்து

குலார் அருகே ஹரித்வாரில் இருந்து கர்ணபிரயாக் நோக்கிச் சென்று கொண்டிருந்த பேருந்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து அதிகாலை நேரத்தில் பள்ளத்தாக்கில் கவிழ்ந்தது. மொத்தமாக 35 பேர் பயணித்த பேருந்து, சுமார் 100 அடிப்பள்ளத்தில் கவிழ்ந்து பாறைகளுக்கிடையே சிக்கி கடும் சேதமடைந்தது. விபத்தைத் தொடர்ந்து பியாசி மற்றும் தல்வாலாவில் இருந்து மாநில பேரிடர் மீட்புப் படையினர், விபத்து நிகழ்ந்த இடத்திற்கு சென்று மீட்புப் பணியைத் மேற்கொண்டனர். இவ்விபத்தில் சிக்கி மொத்தமாக 8 பேர் உயிரிழந்ததாகவும் மேலும், 26 பேர் காயமடைந்த நிலையில் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

இது குறித்து தெரிவித்துள்ள பிரதமர் மோடி, விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவிப்பதாகவும், காயமடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுபவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

Source: Read Full Article