“தனுஷ், திரிஷாவுக்கு ஒரு ஓட்டு கூடப் போடாதீங்க” - தனியரசு பேச்சால் பரபரப்பு

“தனுஷ், திரிஷாவுக்கு  ஒரு ஓட்டு கூடப் போடாதீங்க” - தனியரசு பேச்சால் பரபரப்பு
News Image

காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்டுவது தொடர்பான விவகாரத்தில், உரிய முடிவெடுக்க தமிழக முதலமைச்சர் விஜய்,  உடனடியாக அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்ட வேண்டும் என்று தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை நிறுவனத் தலைவரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான தனியரசு வலியுறுத்தி உள்ளார்.

சேலத்தில் தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவையின் பிரமுகர் இல்ல திருமண விழாவில் கலந்து கொள்ள வந்திருந்த தனியரசு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறுகையில், தமிழ்நாட்டில் புதிய அரசு வந்ததிலிருந்து கடந்த ஆறு மாத காலமாக சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து உள்ளதாகவும் பெண்கள் குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் ஏற்பட்டுள்ளதாகவும் அதிருப்தி தெரிவித்தார்.

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு இருக்கிறதா?

தொடர்ந்து பேசிய அவர், “கடந்த சட்டமன்றத் தேர்தலின் போது பல்வேறு வாக்குறுதிகளை அளித்த தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்,  முதலமைச்சராக பதவி ஏற்ற பிறகு அவற்றை முழுமையாக நிறைவேற்றாமல் இருக்கிறார். மேலும் தமிழ்நாட்டில் அரசு செயல்படுகிறதா என்பது கூட தெரியாத ஒரு சூழல் உள்ளது.  கள்ளக்குறிச்சி மாவட்ட பெண் ஆட்சியருக்கு தமிழக வெற்றிக்கழக எம்எல்ஏ ஒருவர் தவறான குறுஞ்செய்தி அனுப்பியதாக செய்திகள் வெளிவந்துள்ளன. அதில் என்ன உண்மையிலேயே நடந்தது என்பது குறித்து தமிழக அரசு தரப்பில் இருந்து ஒரு சரியான விளக்கம் இல்லை. அதேபோல செஞ்சி அருகே சிறுமி ஒருவர் காணாமல் போய் பல நாட்கள் ஆகியும் அதில் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை. மதுரையில் காவல் நிலையத்திற்கு புகார் அளிக்க சென்றவர் சடலமாக கொண்டு வரப்படுகிறார்.  பல்வேறு இடங்களில் குற்ற செயல்கள் அதிகரித்த வண்ணம் உள்ளன. தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு இருக்கிறதா என்று கேள்வி மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. இதனை முதலமைச்சர் கருத்தில் கொண்டு ஜனநாயக சக்திகளின் குரலுக்கு அவர் உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என்று தனியரசு வலியுறுத்தியுள்ளார்.

விரைவில் மிகப்பெரிய போராட்டம்

தொடர்ந்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதில் அளித்து பேசிய தனியரசு, ‘மேகதாது விவகாரத்தில் தமிழக முதலமைச்சர் விஜய் உரிய விளக்கம் தரவில்லை, ஒரு கடிதம் எழுதியதோடு நிறுத்திக் கொண்டு உள்ளார். .அந்த அணை கட்டினால் தமிழ்நாட்டில் என்ன நிலைமை உருவாகும் என்பதை முன்கூட்டியே அறிந்த நாங்கள் எங்களது தமிழ்நாடு கொங்கு  இளைஞர் பேரவை தலைமையில் பல்வேறு எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைத்து சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்தினோம். அதே போல மீண்டும்,  தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனில் மேகதாது அணையை எதிர்த்து தமிழக மக்களை ஒருங்கிணைத்து விரைவில் மிகப்பெரிய போராட்டம் நடத்துவோம்.

தமிழக மக்கள் ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை உள்ளவர்கள். சினிமா கவர்ச்சி அரசியலை கெடுத்துள்ளது. சினிமா கவர்ச்சியை நம்பி இனிமேல் அரசியல் இயக்கங்கள் தொடங்குபவர்கள், தனுஷ் மற்றும் சகோதரி திரிஷா உள்ளிட்ட யாராக இருந்தாலும் அவர்களுக்கு ஒரு வாக்கு கூட தமிழக மக்கள் போடக்கூடாது. சினிமாவில் நடித்தவர்களே முதலமைச்சராகவும் எதிர்க்கட்சித் தலைவராகவும் இருப்பது தமிழர் மாண்புக்கு மிகப்பெரிய இழுக்கு. இந்த நிலை தொடரக்கூடாது” என்று தெரிவித்தார்.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks