EPFO புதிய வசதி அறிமுகம்! வாட்ஸ்அப்பில் PF பேலன்ஸ் தெரிந்துகொள்வது எப்படி?

EPFO புதிய வசதி அறிமுகம்! வாட்ஸ்அப்பில் PF பேலன்ஸ் தெரிந்துகொள்வது எப்படி?
News Image

இந்தியாவை சேர்ந்த கோடிக்கணக்கான பிஎஃப் சந்தாதாரர்களுக்கும் ஒரு குட் நியூஸ் வந்துள்ளது. இனி நீங்கள் வாட்ஸ் அப்பிலேயே பிஎஃப் பேலன்ஸ் உள்பட பல வசதிகளை பெற முடியும். மத்திய தொழிலாளர் துறை அமைச்சர் மன்சுக் மாண்ட்வியா , EPFO சேவைகளை வாட்ஸ்அப் செயலி மூலமாக பெறும் புதிய வசதியை அதிகாரப்பூர்வமாக தொடங்கி வைத்துள்ளார்.

இனி பிஎஃப் உறுப்பினர்கள் எளிய முறையில் தங்களது கணக்கு விவரங்களை மொபைல் போனிலேயே தெரிந்துகொள்ள முடியும். வாட்ஸ் அப்பிலேயே பல சேவைகளும் கிடைக்கும் என்பதால் பல்வேறு தளங்களில் லாகின் செய்ய வேண்டிய தொல்லை இனி இல்லை.

அதே போல சந்தாதாரர்கள் தங்களது இபிஎஃப் பாஸ்புக் விவரங்களை வாட்ஸ்அப் மூலமாகவே பெற்றுக்கொள்ளலாம். மேலும் தங்களது பிஎஃப் கணக்கில் நடந்த கடைசி ஐந்து பரிவர்த்தனைகள் என்னென்ன என்பதை உடனுக்குடன் பார்க்கலாம். பிரதம மந்திரி விக்சித் பாரத் ரோஜ்கர் யோஜனா (Pradhan Mantri Viksit Bharat Rozgar Yojana) திட்டத்தின் கீழ் வரக்கூடிய பயனர்களுக்கு வாட்ஸ்அப் மூலம் தனிப்பயனாக்கப்பட்ட வழிகாட்டுதல்களும் உதவிகளும் வழங்கப்படும்.

EPFO-இன் அதிகாரப்பூர்வ வாட்ஸ்அப் எண்ணான 8796441800 - க்கு 'Hello' என மெசேஜ் அனுப்புவதன் மூலம் உரையாடலை தொடங்கலாம். இது அனைத்து மொழிகளீலும் இயங்கும் வகையிலும், 24 மணி நேரமும் செயல்படும் வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் நீங்கள் மெசேஜ் அனுப்பிய உடன் உங்களின் மொழியை தேர்வு செய்ய சொல்லும். மொழியை தேர்வு செய்த பிறகு பேலன்ஸ், பாஸ்புக், கடைசி 5 பரிவர்த்தனைகள் என ஆப்ஷன் காட்டும் அதில் எது வேண்டுமோ அதனை தேர்வு செய்து கொள்ளலாம். பின்னர் அதில் கேட்கும் தகவல்களை உள்ளிட்டால் நீங்கள் பேலன்ஸ் உள்ளிட்ட தகவல்களை வாட்ஸ் அப் வாயிலாகவே தெரிந்து கொள்ள முடியும்.

பொதுவாக பிஎஃப் பேலன்ஸை தெரிந்து கொள்ள நாம் மெசேஜ், மிஸ்டு கால் சேவைகளை பயன்படுத்த வேண்டும் , இல்லை என்றால் இணையதளம் அல்லது செயலிக்கு சென்று லாகின் செய்ய வேண்டும், ஆனால் இந்த புதிய வாட்ஸ்அப் சேவை முறையானது, பிஎஃப் சேவைகளை எளிதாக பயன்படுத்த வழிவகை செய்துள்ளது. ஆனால் இதற்கு பிஎஃப் கணக்கில் நீங்கள் கொடுத்துள்ள மொபைல் எண் உங்களீடம் இருக்க வேண்டும், அதில் வாட்ஸ் அப் சேவை இருக்க வேண்டும்.

மேலும் பிஎஃப் கணக்கில் அனைத்து தகவல்களும் அப்டேட்டாக இருக்க வேண்டும். இபிஎஃப்ஓ-இன் 74ஆவது நிறுவன நாள் விழாவில் இந்த வாட்ஸ்அப் சேவை அறிமுகப்படுத்தப்பட்டது.  ஆதார் சரிபார்க்கப்பட்ட செயலற்ற இபிஎஃப் கணக்குகளில் 1,000 ரூபாய் வரை இருப்பு வைத்துள்ளவர்கள் இனி தனித்தனியாக கிளைம் செய்ய விண்ணப்பிக்க வேண்டிய அவசியமில்லை. தேவையான அடையாள மற்றும் வங்கி கணக்கு சரிபார்ப்புகளுக்குப் பிறகு, இபிஎஃப்ஓ அமைப்பே தானாகவே பணத்தை வரவு வைக்கும் செயல்முறையை தொடங்கும்  என கூறப்படுகிறது.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks