மக்களின் அதிகமான பயன்பாட்டில் இருக்கும் பேமெண்ட் சேவையாக இருக்கும் UPI தளத்தின் தினசரி பரிமாற்ற அளவு வரலாற்றிலேயே முதல் முறையாக ஒரு நாளுக்கு 1 லட்சம் கோடி ரூபாய் அளவில் உயர்ந்துள்ளது. UPI சேவை மீது MDR கட்டணம் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்ட பின்பு இப்புதிய சாதனை அளவீட்டை எட்டியுள்ளது.

UPI மீது MDR கட்டணம் விதிக்கப்படுவது குறித்து வெளியான அறிவிப்பு முதலீட்டுச் சந்தையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது என்றால் மிகையில்ல. கட்டண உயர்வு குறித்து வெளியான அறிவிப்பில் தனிநபர் மத்தியிலான பரிமாற்றத்தில் எவ்விதமான கட்டணம் இல்லை என்றாலும் வணிகர்கள் உடனான பரிமாற்றத்தின் போது 2000 ரூபாய்க்கு அதிகமான தொகைக்கு 0.4 சதவீதம் எம்டிஆர் கட்டணம் விதிக்கப்படும் எனவும் இது அக்டோபர் 15ஆம் தேதி முதல் அமலாக்கம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது.

ஆனால் வணிகர்கள் மத்தியில் எழுந்த எதிர்ப்பு காரணமாக இக்கட்டண விதிப்பைத் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. தற்போதைய சூழ்நிலையில் இந்த MDR கட்டணம் HOLD நிலையில் உள்ளது, எப்போது அமலாக்கம் செய்யப்படும் என்பதை இன்னும் அறிவிக்கப்படவில்லை.இந்த நிலையில் அக்டோபர் மாதம் மட்டும் UPI வாயிலாக சுமார் 31.53 லட்சம் கோடி ரூபாய் அளவிலான நிதி பரிமாற்றம் செய்யப்படுகிறது. இதன் மூலம் முதல் முறையாக ஒரு நாளுக்கு 1 லட்சம் கோடி ரூபாய் அளவிலான நிதி பரிமாற்ற அளவீட்டை எட்டப்பட்டு உள்ளது.

அக்டோபர் இந்தியாவின் முக்கிய பண்டிகை காலமாக இருந்த வேளையில் அதிகளவிலான வர்த்தகம், வர்த்தகத்திற்கான நிதி பரிமாற்றம் யூபிஐ வாயிலாக நடந்துள்ளது. இதற்கு முன்பு செப்டம்பர் மாதம் அதிகப்படியாக 98000 கோடி ரூபாய் அளவு எட்டப்பட்டது. மேலும் மே மாதம் அதிகப்படியாக 29.9 லட்சம் கோடி அளவீட்டை எட்டப்பட்ட நிலையில் இன்று 31.53 லட்சம் கோடி அளவீடு எட்டப்பட்டு உள்ளது. மாத அளவிலும் சரி, தினசரி அடிப்படையிலும் சரி அக்டோபர் மாதம் புதிய உச்சத்தை எட்டியுள்ளது. இந்தியாவில் நடக்கும் 89 சதவீத டிஜிட்டல் பரிமாற்றங்கள் UPI வாயிலாக நடக்கிறது என NPCI அமைப்பு தெரிவித்துள்ளது.

UPI சேவையில் எம்டிஆர் கட்டணம் விதிக்கப்பட்டால் பெரும் பகுதி வர்த்தகம் ரொக்கம் வாயிலாக நடக்கும் என அச்சம் நிலவும் வேளையில் தினசரி 1 லட்சம் கோடி என்ற நடைமுறை சாதனை கட்டண விதிப்பைத் தள்ளிப்போட வைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Source: Read Full Article