சிறை பாதுகாப்பை உறுதிப்படுத்த தமிழக அரசு தீவிரம்! - முன்னாள் டிஜிபி தலைமையில் குழு அமைப்பு

சிறை பாதுகாப்பை உறுதிப்படுத்த தமிழக அரசு தீவிரம்! - முன்னாள் டிஜிபி தலைமையில் குழு அமைப்பு
News Image

சிறைகளில் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில் முன்னாள் டிஜிபி திரிபாதி தலைமையில் உயர்மட்டக் குழுவை அமைத்து தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் அண்மையில் சிறைகளில் இருந்து கைதிகள் தப்பிச் சென்ற சம்பவங்களுக்கு காரணமான பாதுகாப்பு குறைபாடுகள் குறித்து விரிவான விசாரணை நடத்தவும், சிறைச்சாலைகளின் பாதுகாப்பை வலுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பரிந்துரைக்கவும், நாட்டின் பிற மாநிலங்களிலும் வெளிநாடுகளிலும் பின்பற்றப்படும் சிறந்த நடைமுறைகளின் அடிப்படையில் எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் உயர்நிறைக் குழு ஒன்றை அமைக்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

உயர்நிலைக்குழு அமைப்பு

தமிழக அரசு அமைத்துள்ள இந்த ஓய்வுக்குழுவில், முன்னாள் காவல்துறை தலைமை இயக்குநர் J.K.திரிபாதி தலைவராகவும், சிறைத்துறை காவல் இயக்குநரும் ஏடிஜிபி சங்கர் மற்றும் சிறைத்துறை முன்னாள் துணைத்தலைவர் ராஜேந்திரன் ஆகியோர் உறுப்பினர்களாக செயல்படுவார்கள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கைதிகள் தப்பிய விவகாரம்!

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே உள்ள மாவட்ட சிறையில் இருந்து அக்.26-ந்தேதி இரவு காவலர்களை தாக்கி மொத்தம் 17 கைதிகள் தப்பிச்சென்றனர். ஒரே நேரத்தில் இத்தனைகள் கைதிகள் தப்பியது பேசுபொருளாகிய நிலையில், இது சிறைத்துறையினரின் அலட்சியப்போக்கை வெளிக்காட்டியதாக கடும் கண்டனங்கள் எழுந்தன. இதனையடுத்து கோவை மத்திய சிறையிலிருந்து கைதி ஒருவர் தப்பியோடியது போன்ற நிகழ்வுகள் அடுத்தடுத்து அரங்கேறியதன் விளைவாக சிறைத்துறை காவல் இயக்குநராக பதவி வகித்த சந்தீப்ராய் ரத்தோர் அப்பதவியில் இருந்து மாற்றப்பட்டு ஏடிஜிபி சங்கர் அப்பதவியில் அமர்த்தப்பட்டார்.

முன்னாள் டிஜிபி திரிபாதியின் பின்னணி என்ன?

2019 - 2021 காலக்கட்டத்தில் தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு டிஜிபியாக பணியாற்றியவர்தான் ஜே.திரிபாதி. ஒடிசாவை பூர்வீகமாகக்கொண்ட திரிபாதி, 1985 ஆம் ஆண்டு ஐபிஎஸ் தேர்வில் தேர்ச்சி பெற்று தமிழக கேடர் அதிகாரியாக நியமிக்கப்பட்டார்.சுமார் 30 ஆண்டுகள் தமிழக காவல்துறையில் பணியாற்றிய இவர், சென்னை காவல் ஆணையர், சிறைத்துறை ஏடிஜிபி, சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி, சீருடை பணியாளர் தேர்வாணையத்தல் உள்ளிட்ட முக்கிய பதவிகளை வகித்துள்ளார். 2021-ஆம் ஆண்டு ஜூன் -30 இல் பணி ஓய்வு பெற்ற திரிபாதி ஐபிஎஸ், பின்னர் ஒடிசா மாநிலத்தின் தலைமை தகவல் ஆணையராக நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks