Diwali Bonus: குஷியில் துள்ளிக்குதிக்கும் ஊழியர்கள்! தீபாவளி போனஸ் தொடர்பான அடுத்த அறிவிப்பு!

Diwali Bonus: குஷியில் துள்ளிக்குதிக்கும் ஊழியர்கள்! தீபாவளி போனஸ் தொடர்பான அடுத்த அறிவிப்பு!
News Image

தீபாவளி பண்டிகை வருகின்ற நவம்பர் 8-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இந்த தீபாவளி பண்டிகையை சிறப்பாகவும், மகிழ்ச்சியுடன் கொண்டாடும் விதமாக அரசு ஊழியர்களுக்கு போனஸ் அறிவிக்கப்படுவது வழக்கம். அதன்படி அரசு பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் ‘சி’ மற்றும் ‘டி’ பிரிவு ஊழியர்கள், போக்குவரத்து ஊழியர்கள்,  டாஸ்மாக் ஊழியர்கள், கூட்டுறவு நிறுவனப் பணியாளர்களுக்கு தீபாவளி போனஸ் குறித்த அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டது. இந்நிலையில் இன்று ஆவின் பணியாளர்களுக்கு 20% போனஸ் வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

ஆவின் ஊழியர்களுக்கு போனஸ்

அதில், தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையம் மற்றும் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்களுக்கு 2025-2026 ஆம் ஆண்டிற்கான மிகை ஊதியம் 8.33 விழுக்காடு மற்றும் 11.67 விழுக்காடு கருணை தொகை என மொத்தம் 20 விழுக்காடு மிகை ஊதியம் மற்றும் கருணை தொகை வழங்க ஆணையிட்டுள்ளார்கள்.

இதையும் படிங்க: Diwali Bonus: தீபாவளி போனஸ் அறிவிப்பு! யார் யாருக்கு எவ்வளவு? குஷியில் ஊழியர்கள்!

3002 பணியாளர்களுக்கு ரூ.4.49 கோடி

தொடர்ந்து, தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையத்தில் பிரிவில் பணியாற்றும் 791 நபர்கள், D பிரிவில் பணியாற்றும் 102 நபர்கள் மற்றும் ஒப்பந்தப் பணியாளர்கள் 213 நபர்கள் என 1106 அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு ரூ.1.56 கோடி மதிப்பிலும் மற்றும் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் C பிரிவில் பணியாற்றும் 991 நபர்கள் D பிரிவில் பணியாற்றும் 901 நபர்கள் ஒப்பந்தப் பணியாளர்கள் 4 நபர்கள் என 1896 அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு ரூ.2.93 கோடி மதிப்பிலும் என மொத்தம் C பிரிவில் பணியாற்றும் 1782 நபர்கள், D பிரிவில் பணியாற்றும் 1003 நபர்கள் மற்றும் ஒப்பந்தப் பணியாளர்கள் 217 நபர்கள் என 3002 அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு ரூ.4.49 கோடி மதிப்பில் 2025-2026 ஆம் ஆண்டிற்கான மிகை ஊதியம் மற்றும் கருணை தொகை பெற்று பயனடைவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: Diwali Special Train: தீபாவளிக்கு சொந்த ஊருக்கு போறீங்களா? சிறப்பு ரயில்கள் அறிவிப்பு! எந்தெந்த ஊர்களுக்கு! முழு விவரம்!

தீபாவளி வாழ்த்து

மேலும், பால்வளத்துறை அமைச்சர் சி.விஜயலஷ்மி தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையம் மற்றும் மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றியங்களில் பணிபுரியும் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள், பால் உற்பத்தியாளர்கள் நுகர்வோர்கள் என அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துகளை தெரிவித்தார்.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks