பஞ்ச்குலா சிறுமி வீடு திரும்பினார்.. பூக்கள் தூவி வரவேற்ற குடும்பத்தினர்!

பஞ்ச்குலா சிறுமி வீடு திரும்பினார்.. பூக்கள் தூவி வரவேற்ற குடும்பத்தினர்!
News Image

ஹரியானா மாநிலம் பஞ்ச்குலாவில் பள்ளியில் கொடூரமாகத் தாக்கப்பட்ட 6 வயது சிறுமி, மருத்துவமனையில் இருந்து குணமடைந்து இன்று வீடு திரும்பியுள்ளார். அவரை குடும்பத்தினர் மற்றும் அப்பகுதி மக்கள் பூக்கள் தூவியும், மாலைகள் அணிவித்தும், கட்டியணைத்தும் வரவேற்றுள்ளனர். சிறுமி வீடு திரும்பிய மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி பலரது கவனத்தைப் பெற்றுள்ளது.

ஹர்யானா சிறுமி தாக்குதல்

ஹரியானா மாநிலம் பஞ்ச்குலாவில் உள்ள அரசு பள்ளியில் கடந்த அக்டோபர் 28ஆம் தேதி இந்த அதிர்ச்சிகரமான சம்பவம் நடந்தது. சிறப்புத் தேவைகள் கொண்ட 6 வயது மழலையர் வகுப்பு மாணவியை, அதே பள்ளியில் படிக்கும் 8 வயது சிறுவன் காலியான வகுப்பறைக்கு அழைத்துச் சென்று கொடூரமாகத் தாக்கினான். சிறுமியின் தலையை மேசையில் மோதியதுடன், காலால் உதைத்தும், செங்கல் மற்றும் பூந்தொட்டியால் தாக்கியும் காயப்படுத்தினான்.

இந்தச் சம்பவம் பள்ளியில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவானது. தாக்குதல் தொடர்பான வீடியோ இணையத்தில் பரவியதைத் தொடர்ந்து நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியும், கண்டனங்களும் எழுந்தன. பள்ளியின் முதல்வர் மற்றும் இரண்டு ஆசிரியர்கள் பணியில் அலட்சியம் காட்டியதற்காக இடைநீக்கம் செய்யப்பட்டனர். சிறுவன் மீதான நடவடிக்கைகள் சிறார் நீதிமுறை நடைமுறைகளின்படி மேற்கொள்ளப்பட்டன.

பூக்கள் தூவி வரவேற்ற மக்கள்

கடுமையான காயங்களுடன் மீட்கப்பட்ட சிறுமி முதலில் பஞ்ச்குலாவில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக சண்டிகரில் உள்ள முதுகலை மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனமான PGIMER மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு பல்வேறு மருத்துவ நிபுணர்கள் அடங்கிய குழுவின் கண்காணிப்பில் சிறுமிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

இந்நிலையில், சிகிச்சை முடிந்து நவம்பர் 4ஆம் தேதி சிறுமி மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். பெற்றோருடன் வீடு திரும்பிய அவருக்கு உறவினர்களும், அப்பகுதி மக்களும் உற்சாக வரவேற்பு அளித்தனர். சிறுமி மீண்டும் தனது வீட்டிற்கு வந்துள்ளதை கொண்டாடும் வகையில் பூக்கள் தூவியும், மாலைகள் அணிவித்தும் வரவேற்றனர்.

சிறுமி வீடு திரும்பிய வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. பள்ளியில் நடந்த கொடூரத் தாக்குதலுக்குப் பிறகு சிறுமி குணமடைந்து வீடு திரும்பியிருப்பது அவரது குடும்பத்தினருக்கு பெரும் நிம்மதியை அளித்துள்ளது.

Not every happy ending makes you emotional, but this one really does! 🥹6yr old little girl from the Panchkula school incident has finally recovered and made it back home. Just look at how many people turned up to welcome her. After everything this little girl has been through, seeing her back home, surrounded by so much love, honestly feels so special. ❤️
— Nikhil saini (@iNikhilsaini) November 4, 2026

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks