முதல்வராக மாணவர்களுக்கு கல்வி விருது வழங்கும் விஜய் : நாளை விழா தொடங்கும் நேரம், இடம் எது தெரியுமா?

முதல்வராக மாணவர்களுக்கு கல்வி விருது வழங்கும் விஜய் :  நாளை விழா தொடங்கும் நேரம், இடம் எது தெரியுமா?
News Image

10-ஆம் வகுப்பு மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் தொகுதி வாரியாக அதிக மதிப்பெண் எடுத்த மாணவர்களுக்கான விருது வழங்கும் விழா நாளை நடைபெறும் தவெக சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தவெக வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக வெற்றிக் கழகத் தலைவரும், முதல்வருமான விஜய் ஆண்டுதோறும் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 10-ஆம் வகுப்பு மற்றும் 12-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வுகளில் தொகுதிகள் வாரியாக அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவச் செல்வங்களை ஊக்குவிக்கும் விதமாக, அவர்களை நேரில் அழைத்து விருது வழங்கிப் பாராட்டி வருகிறார். அந்த வகையில்,  முதல் கட்டமாக 30 தொகுதிகளில் இந்த ஆண்டு அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவச் செல்வங்களுக்கு நாளை சென்னை நீலாங்கரை ஆர்.கே.கன்வென்ஷன் சென்டரில் பாராட்டு விழா நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதல்வரான பின்பும் தொடரும் விழா!

மாணவர்களும் அவர்களின் பெற்றோரும் நாளை காலை 11.00 மணிக்கு விழா அரங்கிற்குள் அனுமதிக்கப்பட்டு, சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட உள்ளதாகவும், பின்னர் மதிய உணவும் வழங்கப்பட இருப்ப்தாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், எதிர்காலச் சமுதாயம் வளமானதாகவும் ஆரோக்கியமானதாகவும் இருக்க வேண்டும் என்பதில் தமிழ்நாடு முதலமைச்சர், தனிக் கவனம் செலுத்திச் செயலாற்றி வருவதாகவும், நாளை மதியம் 2.00 மணி அளவில், மாணவச் செல்வங்களுக்கு அவர்களின் பெற்றோர் முன்னிலையில் சான்றிதழும் ஊக்கத் தொகையும் வழங்கி, வாழ்த்தி கௌரவிக்கும் நிகழ்ச்சி நடைபெற உள்ளதாகவும தவெக சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து 4-வது ஆண்டாக நடைபெறும் விழா!

தமிழக வெற்றிக் கழகம் சார்பில் மாணவர்களுக்கு கல்வி விருது வழங்கும் விழா 2023-ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து  3 ஆண்டுகளாக நடைபெற்றது. இந்நிலையில் நாளை நடைபெற உள்ள 4-வது ஆண்டு விருது வழங்கும் விழாவில் முதன்முதலில் தமிழக முதல்வராக தவெக தலைவர் விஜய் பங்கேற்க உள்ளார். இதற்கு முன் நடைபெற்ற விழாக்களில் காலை முதல் இரவு வரை தானே அனைத்து மாணவர்களுக்கு விருதுகளை விஜய் வழங்கி வந்த நிலையில், முதல்வராக விருதுகளை வழங்க உள்ள விஜய் இதே பாணியை கடைபிடிப்பாரா என ரசிகர்கள் மற்றும் விருது பெற உள்ள மாணவர்கள் ஆர்வம் கொண்டுள்ளனர்.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks