மழைநீர் வடிகால் வசதிகளை முறையாகப் பராமரிக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மழையால் மதுரை மாநகரின் பல்வேறு முக்கியச் சாலைகளில் மழைநீர் தேங்கியுள்ளது.

மதுரையில் பெய்த மழையால் மாநகரின் பல்வேறு முக்கியச் சாலைகளில் மழைநீர் தேங்கியுள்ளது. குறிப்பாக, மாவட்ட ஆட்சியர் அலுவலகச் சாலை, மாவட்ட நீதிமன்றச் சாலை, ரேஸ்கோர்ஸ் சாலை, அண்ணா நகர் காவல் நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் சாலைகளில் மழைநீர் சூழ்ந்துள்ளது. இதனால் அந்த வழியாகச் செல்லும் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர். சில இடங்களில் மழைநீருடன் கழிவுநீரும் கலந்து தேங்கியுள்ளதால் துர்நாற்றம் வீசுவதுடன், நோய்த்தொற்று பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.

மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்

முக்கிய அலுவலகங்கள் மற்றும் மக்கள் அதிகம் பயன்படுத்தும் சாலைகளிலேயே மழைநீர் தேங்கியுள்ளதால் வாகனப் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, தேங்கியுள்ள மழைநீர் மற்றும் கழிவுநீரை உடனடியாக அகற்றி, மழைநீர் வடிகால் வசதிகளை முறையாகப் பராமரிக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Source: Read Full Article