சென்னையில் பச்சிளம் குழந்தை சாலை ஓரத்தில் வீச்சு! காட்டிக்கொடுத்த சிசிடிவி! போலீஸ் விசாரணையில் அதிர்ச்சி

சென்னையில் பச்சிளம் குழந்தை சாலை ஓரத்தில் வீச்சு! காட்டிக்கொடுத்த சிசிடிவி! போலீஸ் விசாரணையில் அதிர்ச்சி
News Image

திருமணமாகி தம்பதிகள் குழந்தைக்காக கோவில் மற்றும் மருத்துவமனைக்கு ஏறி இறங்கி வரும் சூழ்நிலையில் சென்னையில் பிறந்து சில மணி நேரங்களே ஆன பச்சிளம் பெண் குழந்தையை சாலையோரத்தில் வீசி சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை நீலாங்கரை கபாலீஸ்வரர் நகர் பகுதியில் வழக்கம்போல் இன்று காலை பொதுமக்கள் நடைப்பயிற்சி மேற்கொண்டிருந்தனர். அப்போது சாலையோரத்தில் இருந்து குழந்தையின் அழுகுரல் கேட்டுள்ளது. இதையடுத்து அங்கு சென்று பார்த்தவர்கள், பிறந்து சில மணி நேரங்களே ஆன பெண் குழந்தை தொப்புள் கொடியுடன் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

தொப்புள் கொடியுடன் பச்சிளம் குழந்தை

இந்த சம்பவம் தொடர்பாக நீலாங்கரை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் குழந்தையை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்று முதலுதவி சிகிச்சை அளித்தனர். பின்னர் குழந்தைகள் மற்றும் பெண்கள் பாதுகாப்புப் பிரிவு போலீசாரிடம் குழந்தை ஒப்படைக்கப்பட்டது. மேலும், இதுகுறித்து அரசு குழந்தைகள் நலக் குழுமத்திற்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, பச்சிளம் பெண் குழந்தை மேல் சிகிச்சைக்காக சென்னை எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது. அங்கு மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் குழந்தைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

சிக்கிய சிசிடிவி காட்சி

இதனிடையே பச்சிளம் குழந்தையை சாலையோரத்தில் விட்டுச் சென்றது யார்? என்பது குறித்து நீலாங்கரை போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர். மேலும், கபாலீஸ்வரர் நகர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள சிசிடிவி கேமராக்களின் பதிவுகளை ஆய்வு செய்தபோது இரண்டு பெண்கள் குழந்தையை சாலை ஓரத்தில் பிசி சென்ற காட்சிகள் இடம் பெற்றிருந்தது.

போலீஸ் விசாரணையில் பகீர்

சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் இருவரையும் போலீசார் கைது செய்து விசாரித்தனர். அப்போது இருவரும் அம்மா, மகள் என்றும் மகள் திருமணத்திற்கு முன்பாக குழந்தையை பெற்றெடுத்ததால் குழந்தையை வேண்டாம் என்பதற்காக சாலை ஓரத்தில் வீசியதாக போலீசாரிடம் தெரிவித்துள்ளனர்.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks