திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகே மூங்கில்பட்டியைச் சேர்ந்த இளைஞர் வீரமணி (31), இஸ்ரேலில் கட்டிடப் பணியின்போது ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தார். அவரது உடல் நேற்று சொந்த ஊருக்கு கொண்டு வரப்பட்டு, கிராம மக்களின் கண்ணீர் அஞ்சலிக்குப் பின்னர் அடக்கம் செய்யப்பட்டது.

மூங்கில்பட்டியைச் சேர்ந்த சுப்பையா என்பவரின் மகன் வீரமணிக்கு, புவனேஸ்வரி (24) என்ற மனைவியும், தேஜாஸ்ரீ (4) என்ற பெண் குழந்தையும் உள்ளனர். இவர் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கட்டிட வேலைக்காக இஸ்ரேல் சென்றார். கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்துவிட்டு மீண்டும் இஸ்ரேல் சென்றுள்ளார்.

இந்நிலையில், கடந்த மாதம் 28-ம் தேதி இஸ்ரேலில் கட்டிடப் பணியில் ஈடுபட்டிருந்தபோது, லிப்ட்டை நிறுத்தி பழுதுபார்க்கும் பணியில் ஈடுபட்டுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக லிப்ட் திடீரென கீழே இறங்கியதில், அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதையடுத்து, வீரமணியின் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவரது மனைவி மற்றும் கிராம மக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.

அதனைத் தொடர்ந்து, இஸ்ரேலில் இருந்து விமானம் மூலம் நேற்று காலை சென்னை கொண்டு வரப்பட்ட வீரமணியின் உடல், அங்கிருந்து அரசு வாகனம் மூலம் அவரது சொந்த ஊரான மூங்கில்பட்டிக்கு நவம்பர் 7 (இன்று)மாலை கொண்டு வரப்பட்டது.

அங்கு திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் சச்சிதானந்தம், மதிமுக மாநில உயர்நிலைக் குழு உறுப்பினரும், மாவட்டச் செயலாளருமான செல்வராகவன், மாவட்டப் பொருளாளர் பாலகுரு, சாணார்பட்டி ஒன்றியச் செயலாளர்கள் பாலன், மணிகண்டன், தவெக நிர்வாகிகள் சந்தோஷ்குமார், ஆனந்தகிருஷ்ணன் மற்றும் கிராம மக்கள் உள்ளிட்டோர் வீரமணியின் உடலுக்கு மலர் மாலை அணிவித்து கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர்.

பின்னர், கிராமத்தில் உள்ள மயானத்தில் வீரமணியின் உடல் அடக்கம் செய்யப்பட்டது. வெளிநாட்டிற்கு வேலைக்குச் சென்று இளம் வயதில் உயிரிழந்த வீரமணியின் மரணம், அவரது குடும்பத்தினர் மற்றும் மூங்கில்பட்டி கிராம மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது

Source: Read Full Article