ஜெயிச்சும் சுப்மன் கில் அப்செட்? - நியூசிலாந்துக்கு எதிரான த்ரில் வெற்றிக்குப் பின் நடந்தது என்ன?

ஜெயிச்சும் சுப்மன் கில் அப்செட்? - நியூசிலாந்துக்கு எதிரான த்ரில் வெற்றிக்குப் பின் நடந்தது என்ன?
News Image

நியூசிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் டக்வொர்த் லூயிஸ் விதிமுறைப்படி 4 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி த்ரில் வெற்றி பெற்றது.

மழையால் குறைக்கப்பட்ட ஓவர்கள்

மழை காரணமாக, ஆட்டம் தலா 47 ஓவர்களாகக் குறைக்கப்பட்டது. முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி, 41 ஓவர்களில் 134 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. டேரில் மிட்செல் 5 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் உட்பட 55 ரன்கள் எடுத்து அணியின் அதிகபட்ச ஸ்கோரை அடித்தார். கேப்டன் மிட்செல் சான்ட்னர் 31 ரன்கள் எடுத்தார். வேறு எந்த பேட்ஸ்மேனாலும் 15 ரன்களை எட்ட முடியவில்லை. குர்னூர் பிரார் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றி இந்திய அணிக்காக அதிக விக்கெட்டுகளை எடுத்தார். அகிப் நபி, அன்ஷுல் கம்போஜ் மற்றும் அக்சர் படேல் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை எடுத்தனர்.

135 ரன்களை எடுக்க திணறிய இந்திய அணி

சிறிய இலக்கை நோக்கிய ஆட தொடங்கிய இந்திய அணி ஆரம்பமே அதிர்ச்சியை கொடுத்தது. கேப்டன் ஷுப்மன் கில் (0), ரோஹித் சர்மா (23), விராட் கோலி (07) ஆகியோர் சொதப்பினர். 47 ரன்களுக்கு நான்கு விக்கெட்டுகள் வீழ்ந்தன. இதற்குப் பிறகு, இந்தியா வெற்றி பெறுவது மிகவும் கடினம் எனத் தோன்றியது. பின்னர், கே.எல். ராகுல் (26*) மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் ஐந்தாவது விக்கெட்டுக்கு 39 ரன்கள் (43 பந்துகள்) சேர்த்து அணியை ஓரளவுக்கு முன்னெடுத்து சென்றனர். இந்தியா 86 ரன்கள் இருந்தபோது ஸ்ரேயஸ் ஐயர் ஆட்டமிழந்தார். அவர் 46 பந்துகளில் 30 ரன்கள் எடுத்தார். இதில் நான்கு பவுண்டரிகளும் ஒரு சிக்ஸரும் அடங்கும்.

பின்னர் ராகுல், நமன் தீருடன் இணைந்து ஆறாவது விக்கெட்டுக்கு 28 பந்துகளில் 22 ரன்கள் சேர்த்தார். நமன் தீர் ஆட்டமிழந்தபோது, ​​108 ரன்களில் ஆறாவது விக்கெட் வீழ்ந்தது. அவர் இரண்டு பவுண்டரிகளுடன் 16 பந்துகளில் 12 ரன்கள் எடுத்தார். அன்ஷுல் கம்போஜ் ஒரு ரன்னில் ஆட்டமிழக்க  அணி 111 ரன்கள் எடுத்திருந்தது. பின்னர் ஆகிப் நபி களத்திற்கு வந்தார். மழை காரணமாக ஆட்டம் நிறுத்தப்படுவதற்கு முன்பு, ராகுலும் ஆகிப் நபியும் அணியின் ஸ்கோரை 113 ஆக உயர்த்தினர். அதிர்ஷ்டவசமாக, இந்திய அணி நான்கு ரன்கள் முன்னிலையில் இருந்ததால், டக் வொர்த் லூயிஸ் முறைப்படி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இந்தப் போட்டியில் 10 ஓவர்களில் 30 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை வீழ்த்தி, வெற்றிக்கு காரணமான குர்னூர் பிரார் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

நியூசிலாந்து அணிக்காக கைல் ஜேமிசனும் ஜேக்கப் டஃபியும் தலா மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தி அதிக விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். மேத்யூ ஃபிஷர் ஒரு விக்கெட்டை எடுத்தார். இரண்டாவது போட்டியில் பெற்ற வெற்றியின் மூலம், இந்திய அணி தொடரில் 2-0 என முன்னிலை பெற்றது. மூன்றாவது ஒருநாள் போட்டி வரும் 10 ஆம் தேதி நடைபெறுகிறது.

தோற்றிருந்தால் ஏமாற்றம் அடைந்திருப்பேன்

போட்டிக்கு பின் கேப்டன் சுப்மன் கில் கூறுகையில், “இறுதியில் நாங்கள் எதிர்பார்த்ததை விட இரண்டு விக்கெட்டுகள் கூடுதலாக இழந்தோம். பின்னர் மழை பெய்யக்கூடும் என்று எங்களுக்குத் தெரிந்திருந்தது. நாங்கள் ஆடிய கடைசி இரண்டு ஷாட்கள் நன்றாக இல்லை. டிஎல்எஸ் முறைபடி நாங்கள் இந்தப் போட்டியில் நான்கு அல்லது ஐந்து ரன்கள் வித்தியாசத்தில் தோற்றிருந்தால், அது மிகவும் ஏமாற்றமாக இருந்திருக்கும். ஆனால் இறுதியில் வெற்றி பெற்றது மகிழ்ச்சியாக இருந்தது” என்றார்.

குர்னூரை பாராட்டிய கில்

மேலும், “குர்னூர் கடந்த போட்டியிலும் சிறப்பாகச் செயல்பட்டார். அவர் தொடர்ச்சியாகச் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறார். வரவிருக்கும் போட்டிகளில் விளையாடுவதன் மூலம் அவர் மேலும் அனுபவத்தைப் பெறுவார் என்று நம்புகிறேன். அவ்வாறு செய்வதன் மூலம், அவர் தனது லைன் மற்றும் லென்த் மீது சிறந்த கட்டுப்பாட்டைப் பெற முடியும். அவரிடம் வேகமும் பவுன்ஸும் உள்ளது. இப்போது, ​​அவரால் எவ்வளவு கட்டுப்பாட்டுடன் பந்துவீச முடியும் என்பதுதான் கேள்வி’ என்று கூறினார்.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks