தீபாவளிக்கு பட்டாசு வெடிக்கலாமா? கூடாதா? - தமிழக அரசு வெளியிட்ட பரபரப்பு அறிக்கை!

தீபாவளிக்கு பட்டாசு வெடிக்கலாமா? கூடாதா? - தமிழக அரசு வெளியிட்ட பரபரப்பு அறிக்கை!
News Image

தீபாவளி பண்டிகையன்று காலை 6 முதல் 7 மணிவரையலும், இரவு நேரத்தில் 7 முதல் 8 மணி வரையிலுமே பட்டாசுகளை வெடிக்க வேண்டுமென தமிழக அறிவுறுத்தியுள்ளது. இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், தீபாவளித் திருநாள் மக்களால் மகிழ்ச்சியுடன் கொண்டாடப்படும் திருநாளாகும். இத்திருநாளில் சிறுவர் முதல் பெரியவர் வரை பட்டாசுகளை வெடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்துவார்கள், அதேவேளையில் பட்டாசுகளை வெடிப்பதால் நிலம், நீர், காற்று ஆகியவை மாசுபடுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி

உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் தமிழ்நாடு அரசு 2018-ஆம் ஆண்டிலிருந்து இரண்டு மணிநேரம் மட்டுமே ஒலி எழுப்பும் பட்டாசுகளை வெடிக்க வழங்கி வருகிறது. அந்தவகையில் இந்த ஆண்டும் தீபாவளித்தினத்தன்று காலை 6 முதல் 7 மணி வரையிலும், இரவு 7 முதல் 8 மணிவரையிலும் ஒலி எழுப்பும் பட்டாசுகளை வெடிக்க வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பொதுமக்கள் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள்

பொதுமக்கள் குறைந்த ஒலியுடனும், குறைந்த அளவில் காற்று மாசுபடுத்தும் தன்மைக்கொண்ட பசுமை பட்டாசுகளை மட்டுமே வெடிக்க வெண்டும் எனவும், மாவட்ட நிர்வாகம் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் முன்
அனுமதியுடன், பொதுமக்கள் திறந்த வெளியில் ஒன்று கூடி கூட்டாக பட்டாசுகளை வெடிப்பதற்கு அந்தந்த பகுதிகளில் உள்ள நலச்சங்கங்கள் மூலம் முயற்சிக்க வேண்டும் எனவும் தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.

பொதுமக்கள் தவிர்க்க வேண்டிய செயல்பாடுகள்

அதிக ஒலி எழுப்பும் மற்றும் தொடர்ச்சியாக வெடிக்கக்கூடிய சரவெடிகளை தவிர்க்க வேண்டுமெனவும், மருத்துவமனைகள், வழிபாட்டுத்தலங்கள் மற்றும் அமைதியான பட்டாசுகள் வெடிப்பதை தவிர்க்க வேண்டுமெனவும், குடிசைப் பகுதிகள் மற்றும் எளிதில் தீப்பற்றக்கூடிய இடங்களுக்கு அருகே பட்டாசு வெடிக்கக்கூடாது எனவும் தமிழக அரசு வலியுறுத்தியுள்ளது.

மேலும், சுற்றுச் சூழலுக்கு அதிக மாசு ஏற்படுத்தாத பட்டாசுகளை அரசு அனுமதித்துள்ள நேரத்தில் உரிய இடங்களில் வெடித்து மாசற்ற தீபாவளியை கொண்டாட வேண்டுமெனவும் தமிழ்நாடு அரசு மற்றும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் அறிவுறுத்தல்களை வெளியிட்டுள்ளது.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks