தீபாவளி ரயில் பயணிகளுக்கு குட் நியூஸ்! சென்னை முதல் தென் மாவட்டங்கள் வரை சிறப்பு ரயில்கள் அறிவிப்பு!

தீபாவளி ரயில் பயணிகளுக்கு குட் நியூஸ்! சென்னை முதல் தென் மாவட்டங்கள் வரை சிறப்பு ரயில்கள் அறிவிப்பு!
News Image

தீபாவளி கூட்ட நெரிசலை குறைப்பதற்கு தெற்கு ரயில்வே  நிர்வாகம் சார்பில்  செய்திக்குறிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில் கூறியுள்ளதாவது, சென்னை எழும்பூர் - கன்னியாகுமரி இடையே இயக்கப்படும் ஒருவழி சிறப்பு விரைவு ரயில் (06151), சென்னை எழும்பூரில் இருந்து நவம்பர் 5 ஆம் தேதி இரவு 11.50 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் பிற்பகல் 3.15 மணிக்கு கன்னியாகுமரியை சென்றடையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல, நவம்பர் 9 ஆம் தேதி இரவு 11:20 மணிக்கு கன்னியாகுமரியில் இருந்து புறப்படும் ஒருவழி சிறப்பு ரயில் (06152), மறுநாள் நண்பகல் 12 மணிக்கு எழும்பூரை வந்தடையும். தாம்பரம் - தென்காசி இடையே இயக்கப்படும் சிறப்பு ரயில் (06049), தாம்பரத்தில் இருந்து நவம்பர் 7 ஆம் தேதி காலை 5 மணிக்கு புறப்பட்டு, அதே நாளில் மாலை 4.45 மணிக்கு தென்காசியை சென்றடையும். எதிர்வழித்தடத்தில், செங்கோட்டை – தாம்பரம் இடையே இயக்கப்படும் சிறப்பு ரயில் (06050), செங்கோட்டையில் இருந்து நவ. 9 ஆம் தேதி பிற்பகல் 3 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் அதிகாலை 3.20 மணிக்கு தாம்பரத்தை வந்தடையும்.

தீபாவளியை முன்னிட்டு, கேரள மாநிலம், கொல்லத்தில் இருந்து சென்னைக்கு இரண்டு வழிகளிலும் ஈரோடு வழியாக சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன. தீபாவளி திருநாள் காலத்தை முன்னிட்டு, பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு சென்னையில் இருந்து ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர், போத்தனூர் வழியாக கொல்லத்துக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன.

அதன்படி, சென்னை எழும்பூர் - கொல்லம் வாராந்திரச் சிறப்பு ரயில் (வண்டி எண் 06117) வரும் 5 மற்றும் 12 ஆம் தேதி இரவு 11.40 மணிக்கு சென்னை, எழும்பூரில் இருந்து புறப்பட்டு மறுநாள் மாலை 4.20 மணிக்கு கொல்லத்தை வந்தடையும். இதேபோல, கொல்லம் - சென்னை எழும்பூர் வாராந்திரச் சிறப்பு ரயில் (வண்டி எண் 06118) வரும் 6, 13-ஆம் தேதிகளில் மாலை 6.45 மணிக்கு கொல்லத்தில் இருந்து புறப்பட்டு மறுநாள் 7, 14- ஆம் தேதிகளில் பகல் 12.30 மணிக்கு எழும்பூரை சென்றடையும்.

தீபாவளியையொட்டி சென்னை - கொல்லம் இடையே போத்தனூா் வழித்தடத்தில் அமிர்தா ரயில் இயக்கப்பட உள்ளதாக ரயில்வே நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நவம்பா் 5, 12 ஆகிய தேதிகளில் (வியாழக்கிழமை) சென்னை எழும்பூரில் இருந்து இரவு 11.40 மணிக்கு புறப்படும் சென்னை - கொல்லம் அமிர்தா ரயில் (எண்: 06117) மறுநாள் மாலை 4.20 மணிக்கு கொல்லம் நிலையத்தை சென்றடையும். எதிர்வழித்தடத்தில் நவம்பா் 6, 13 ஆகிய தேதிகளில் (வெள்ளிக்கிழமை) கொல்லத்தில் இருந்து மாலை 6.45 மணிக்கு புறப்படும் கொல்லம் - சென்னை அமிர்தா ரயில் (எண்: 06118) மறுநாள் நண்பகல் 12.30 மணிக்கு சென்னை எழும்பூரைச் சென்றடையும்.

இந்த ரயில் காயன்குளம், மாவேலிக்கரா, செங்கண்ணூர், திருவல்லா, சங்கணாச்சேரி, கோட்டயம், எர்ணாகுளம் டவுன், ஆலுவா, திருச்சூர், பாலக்காடு, போத்தனூர், திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி, அரக்கோணம், திருவள்ளூர், பெரம்பூர் உள்ளிட்ட நிலையங்களில் நின்று செல்லும் என்று குறிப்பிட்டுள்ளது.  சென்னை எழும்பூர் - கன்னியாகுமரி சிறப்பு ரயில் (எண்: 06045) நவம்பர் 6 மற்றும் 13 ஆகிய தேதிகள் வரையிலும், எதிர்வழித்தடத்தில் கன்னியாகுமரி - சென்னை எழும்பூர் சிறப்பு ரயில் (எண்: 06046) நவம்பர் 8, 15 ஆகிய தேதிகள் வரையிலும் நீட்டிக்கப்பட்டுள்ளது.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks