மேகமலை மலை கிராம மக்களுக்கு அடிப்படை வசதிகள் கிடைக்குமா? அமைச்சர் நிர்மல்குமார் முக்கிய அறிவிப்பு!

மேகமலை மலை கிராம மக்களுக்கு அடிப்படை வசதிகள் கிடைக்குமா? அமைச்சர் நிர்மல்குமார் முக்கிய அறிவிப்பு!
News Image

மேகமலை, வருசநாடு விவகாரத்தில் கடந்த காலங்களில் திமுகவும், அதிமுகவும் கடும் மெத்தனத்துடன் செயல்பட்டுள்ளனர். இதன் காரணமாக 20 ஆண்டுகளாக  எந்த வித அடிப்படை வசதியும் இன்றி 1 லட்சம் மக்கள்  அகதிகளாக வாழ்ந்து வந்துள்ளனர். மேகமலை, வருஷநாடு மலை கிராம மக்களை சந்தித்த பின் அமைச்சர் நிர்மல் குமார் பேட்டியளித்தார்.

தேனி மாவட்டம் கடமலை - மயிலை ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட ஶ்ரீவில்லிபுத்தூர் -  மேகமலை புலிகள் காப்பக பகுதிகளான மஞ்சனூத்தி, சிங்கராஜபுரம் உள்ளிட்ட மலை கிராம மக்களை அமைச்சர் நிர்மல் குமார் நேரில் சந்தித்து மேகமலை, வருஷநாடு விவகாரம் குறித்து அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கை குறித்து பொதுமக்களிடம் உரையாடினார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் நிர்மல் குமார் கூறும்போது, கடந்த காலங்களில் மக்கள் வசிக்கும்  எண்ணிக்கை மற்றும் பட்டா நிலங்கள் உள்ளிட்டவற்றில் பல்வேறு தவறுகள் நடந்துள்ளது, வருஷநாடு, மேகமலை புலிகள் காப்ப பகுதிகளில் 1 லட்சம் மக்கள் உள்ளனர், 25 ஆயிரம் குடும்பங்கள் உள்ளது இதைப்பற்றி எதுவும் தெரியாமல் திமுகவும் , அதிமுகவும் கடந்த காலங்களில் கடும் மெத்தனத்துடன் செயல்பட்டுள்ளனர்.

இதன் விளைவாக 20 ஆண்டுகளாக சாலை வசதி, குடிநீர் வசதி உள்ளிட்ட எந்த வித அடிப்படை வசதியும் இன்றி 1 லட்சம் மக்கள்  அகதிகளாக வாழ்ந்து வந்துள்ளனர். தவெக ஆட்சி வந்ததில் இருந்து மலைக்கிராம மக்கள் பல ஆண்டுகளாக வசித்ததற்கான வருவாய் ஆவணம், மாவட்ட வரைபடம், மக்கள் தொகை உள்ளிட்டவை சேகரித்து வருகிறோம் 1912 ஆம் ஆண்டு முதல் உள்ள ஆவணங்களை சேகரித்து உண்மை நிலை என்னவென்று நீதிமன்றத்தில் எடுத்துரைப்போம்.

மக்களுக்கு என்ன நடக்கிறது என்று தெரியாமல் உள்ளனர். அதை அவர்களிடம் தெளிவுபடுத்தவே இந்த சந்திப்பு நடத்தி மக்களிடம் தெரிவித்துள்ளோம், அரசாங்கம் முழுவீச்சில் செயல்பட்டு இந்த மக்களின் உரிமையை பெற்று தரும்1 லட்சம் மக்கள் எப்படி வனப்பகுதிகளை ஆக்கிரமிப்பு செய்ய முடியும்? பட்டா நிலங்களில் உள்ளவர்களை ஆக்கிரமிப்பாளர்கள் என கடந்த ஆட்சியாளர்கள்  சேர்த்துள்ளனர். மக்களுக்கு எது காடு, எது வனம் என்று தெரியாது அரசாங்கம் தான் அதை சொல்ல வேண்டும். ஆனால், முன்பு இருந்த அரசு அதனை செய்யவில்லை அதன் விளைவு தன மக்கள் அவதி அடைகின்றனர் என்று தெரிவித்தார்.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks