மேகதாது அணை விவகாரம் தொடர்பாக நவ.16 அன்று பிரதமர் நரேந்திர மோடியை முதலமைச்சர் சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

பிரதமரை சந்திக்கும் முதல்வர்

பிரதமருடனான முதல்வரின் சந்திப்பு என்பது மேகதாது விவகாரத்தை அடிப்படையாக கொண்டே அமையுமென கூறப்படுகிறது.மேகதாதுவில் அணை கட்டியே தீருவதென கர்நாடக அரசு தீவிரம் காட்டிவருவதோடு அணை கட்டப்படுவதை யாராலும் தடுக்க முடியாதென அம்மாநில முதல்வர் டி.கே.சிவக்குமார் பகிரங்கமாகவே தெரிவித்து வருகிறார்.இந்நிலையில் மேகதாது அணை கட்டப்பட்டால் தமிழகத்திற்கான நீர்வரத்து பாதிக்கப்படுமென தமிழக அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. பெங்களூருக்கான நீர்த்தேவை பூர்த்தி, மின்சார உற்பத்தி உள்ளிட்டவற்றை காரணம் காட்டி அணையை கட்ட முயலும் கர்நாடக அரசு, அணையை கட்டிவிட்டால் தமிழகத்திற்கு வரும் குறைந்த அளவு நீரும் தடுக்கப்படுமோ என்ற அச்சம் தமிழக விவசாயிகளிடத்தில் மேலோங்கி உள்ளது.

இதன் காரணமாக மேகதாது அணை விவகாரத்தில் தமிழகத்தரப்பு நியாயம் குறித்து பிரதமரிடம் வலியுறுத்த உள்ளதாகவும், அணைக்கட்டப்பட்டால் அதனால் தமிழகம் எதிர்க்கொள்ளும் பாதிப்பு குறித்து விவரிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

சோனியா காந்தி புத்தக வெளியீட்டு விழாவில் பங்கேற்பு

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான சோனியா காந்தியின் சுயசரிதை நூல் வெளியீட்டு விழா டெல்லியில் நவம்பர் 16-ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்நிகழ்விலும் முதல்வர் விஜய் பங்கேற்பார் என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த சுயசரிதை வெளியீட்டு விழாவிற்கு பெருமளவிலானோருக்கு அழைப்பு விடுக்கப்படாத நிலையில் சோனியா காந்தி குடும்பத்தினரால் குறிப்பிட்ட சிலருக்கே அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

Source: Read Full Article