கார் வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்! வாடகை கார் தொழில் தொடங்க புதிய விதிகள்!

கார் வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்! வாடகை கார் தொழில் தொடங்க புதிய விதிகள்!
News Image

இந்தியாவில் கார் வாடகைக்கு விடும் தொழில் வேகமாக வளர்ந்து வருகிறது. கார் வாடகை தொழிலை எளிதாக்கும் வகையில் மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சகம் புதிய சீர்திருத்தங்களை கொண்டு வர தயாராகியுள்ளது.

Rent-a-Cab Scheme 2026 என்ற புதிய மசோதா வரைவை போக்குவரத்து அமைச்சகம் வெளியிட்டுள்ளது. 1989-ஆம் ஆண்டின் பழைய விதிமுறைகளுக்கு மாற்றாக கொண்டுவரப்பட்டுள்ள இந்த புதிய வரைவு திட்டம், வரும் ஜனவரி மாதம் முதல் அமலுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்த கருத்துகளை பொதுமக்கள் வரும் டிசம்பர் 5-ஆம் தேதி வரை தெரிவிக்கலாம்.

இதுவரை கார் வாடகை தொழிலை தொடங்க குறைந்தபட்சம் 50 கார்களை வைத்திருக்க வேண்டும் என விதி இருக்கிறது. ஆனால், புதிய திட்டத்தின்படி இந்த வரம்பு வெறும் 5 கார்களாக குறைக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது. மேலும் நிறுவனம் செயல்படும் ஒவ்வொரு ஏரியாவிலும் குறைந்தபட்சம் 2 கார்கள் நிறுத்தப்பட்டிருக்க வேண்டும். மேலும், நாட்டின் 5 சுற்றுலா நகரங்களில் கிளைகள் வைத்திருக்க வேண்டும் என்ற பழைய நிபந்தனைகள் நீக்கப்படும் என அந்த வரைவு மசோதாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தனித்தனி முதன்மை மற்றும் கிளை உரிமங்களுக்கு பதிலாக, மாநிலம் அல்லது யூனியன் பிரதேசம் முழுவதும் செல்லுபடியாகும் ஒற்றை மின்னணு உரிமம் ஒரே சீரான கட்டணத்தில் வழங்கப்படும். விமான நிலையங்கள், ரயில் நிலையங்கள் மற்றும் பேருந்து நிலையங்கள் போன்றவையும் முறையான இயக்க இடங்களாக அனுமதிக்கப்படும் என அதில் கூறப்பட்டுள்ளது.

புதிய உரிமங்கள் வழங்குவதற்கும், அவற்றை புதுப்பிப்பதற்கும் 60 நாட்கள் காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வாடகைக்கு விடப்படும் கார்கள் முறையான பதிவுச் சான்று , தகுதிச் சான்று மற்றும் மாசு கட்டுப்பாட்டுச் சான்றிதழ்பெற்றிருக்க வேண்டும். அனைத்து மோட்டார் வாகன வரிகளும் செலுத்தப்பட்டிருக்க வேண்டும் என மசோதாவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கார்கள் மீது எந்தவிதமான நிலுவையில் உள்ள அபராதங்களோ அல்லது சுங்க கட்டணங்களோ இருக்கக் கூடாது. மேலும், தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் காவல்துறை குற்ற தரவுத்தளத்தில் அந்த வாகனம் இடம் பெற்றிருக்கக் கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. வாடகைக்கு விடப்படும் அனைத்து கார்களிலும் ஜிபிஎஸ் மற்றும் முதலுதவி பெட்டிகள் கட்டாயமாக்கப்பட்டுள்ளன.

குழந்தை இருக்கைக்கான வசதியும் விருப்பத்தின் அடிப்படையில் அனுமதிக்கப்பட்டுள்ளது.வாடகை வாகன சேவை வழங்கும் நிறுவனங்கள் பிரத்யேக இணையதளத்தை செயல்படுத்த வேண்டும், 24 மணி நேரமும் செயல்படும் வாடிக்கையாளர் குறைதீர்ப்பு மையத்தை இயக்க வேண்டும். இணையதளம் வழியே வரும் புகார்களுக்கு 24 மணி நேரத்திற்குள்ளும், ஓட்டுநர்கள் மீதான புகார்களுக்கு 7 நாட்களுக்குள்ளும் தீர்வு காணப்பட வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.

5 கார்கள் இருந்தாலே டாக்சி சேவைகளை வழங்கலாம் என்ற முறை வந்தால் இன்னும் ஆயிரக்கணக்கானவர்கள் இந்த தொழிலில் இறங்குவார்கள். இதன் மூலம் கார் வாடகை சந்தையில் போட்டித்திறன் அதிகரித்து, சிறு வணிகர்களுக்கும் வேலைவாய்ப்புகள் பெருகும் என்றும், பயணிகளின் பாதுகாப்பு பலப்படுத்தப்படும் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks