வாணியம்பாடி அருகே கால்வாய் அடைப்பை சரிசெய்து கொண்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கியதில், வெளிநாட்டிலிருந்து விடுமுறைக்கு வந்திருந்த நபர் பரிதாபமாக உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக வாணியம்பாடி நகர காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி பெரிய பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் பயாஸ் அஹமது. வெளிநாட்டில் பணியாற்றி வந்த இவர், கடந்த 2 மாதங்களுக்கு முன்பு விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்துள்ளார். இந்நிலையில், இவரது வீட்டில் இருந்து செல்லும் கழிவுநீர் பைப்லைனில், அடைப்பு ஏற்பட்டதால், இரும்பு கம்பி மூலம் அதனை சரிசெய்யும் பணியில் பயாஸ் அஹமத் ஈடுபட்டிருந்துள்ளார். அப்போது, எதிர்பாராதவிதமாக, அப்பகுதியில் உள்ள மின்கம்பத்திலிருந்து சென்ற, உயர்மின்அழுத்த கம்பி மீது, பையாஸ் அஹமது வைத்திருந்த கம்பி உரசியுள்ளது. மின்சாரம் தாக்கியதில் அவர் சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார்.

உடனடியாக இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த, வாணியம்பாடி நகர காவல்துறையினர் அவரது உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்து விசாரணை மேற்க்கொண்டு வருகின்றனர்.

விடுமுறைக்கு வீட்டிற்கு, வந்த நபர், மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Source: Read Full Article