சபரிமலை பக்தர்களுக்கு ரூ.2 லட்சம் இலவச காப்பீடு! தேவசம்போர்டு அதிரடி அறிவிப்பு!

சபரிமலை பக்தர்களுக்கு ரூ.2 லட்சம் இலவச காப்பீடு!  தேவசம்போர்டு அதிரடி அறிவிப்பு!
News Image

சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடப்பு மண்டல, மகர விளக்கு சீசனை முன்னிட்டு வருகிற 16-த்தேதி மாலை 5 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. 17ந்தேதி முதல் மண்டல பூஜை வழிபாடுகள் நடைபெற உள்ளது. மண்டல பூஜை டிசம்பர் 27-ம் தேதியும், மகர விளக்கு மற்றும் ஜோதி தரிசனம் 2027-ம் ஆண்டு ஜனவரி 14-ம் தேதியும் நடைபெற உள்ளன.

இதற்கிடையே சபரிமலை ஐயப்பன் கோவிலில் தரிசனம் செய்ய விர்ச்சுவல் கியூ (Virtual Queue) முன்பதிவு கட்டாயம் என்று திருவிதாங்கூர் தேவஸ்வம் போர்டு அறிவுறுத்தியுள்ளது. பக்தர்கள் அதிகாரப்பூர்வ திருவிதாங்கூர் தேவஸ்வம் போர்டு இணையதளம் அல்லது செயலி வழியாக முன்பதிவு செய்யலாம். விர்ச்சுவல் கியூ முன்பதிவு முற்றிலும் இலவசம். சபரிமலை மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜை தரிசனத்திற்கு வரும் அனைத்து பக்தர்களும் (குறிப்பாக வெளிமாநில பக்தர்கள்) தாங்கள் புறப்படும் முன்பே ஆன்லைனில் முன்பதிவு செய்து கொள்ள வேண்டும்.

குறிப்பாக சபரிமலைக்கு செல்லும் ஐயப்ப பக்தர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு அவர்களுக்கு ரூபாய் 2 லட்சம் மதிப்பிலான இலவச காப்பீடு வழங்க தேவசம்போர்டு திட்டமிட்டுள்ளது. இதற்காக ஆயுள் காப்பீட்டுக் கழகத்துடன் எல்.ஐ.சி  இணைந்து புதிய காப்பீட்டு திட்டத்தை செயல்படுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

சபரிமலைக்கு ஆண்டுதோறும் மண்டல மற்றும் மகர விளக்கு சீசன்களின் போது நாடு முழுவதும் இருந்து லட்சக்கணக்கான ஐயப்ப பக்தர்கள் வருகை தருகின்றனர். பக்தர்களின் பாதுகாப்பு மற்றும் நலனை கருத்தில் கொண்டு அவர்களுக்கு காப்பீட்டு வசதி இலவசமாக வழங்க தேவசம்போர்டு முடிவு செய்துள்ளது. இதன் அடிப்படையில் சபரிமலைக்குச் செல்லும் ஒவ்வொரு பக்தரும் ரூபாய் 2 லட்சம் மதிப்பிலான காப்பீடு வழங்க திட்டமிட்டுள்ளது. இந்தத் திட்டத்தை lic நிறுவனத்துடன் இணைந்து செயல்படுத்த தேவசம்போர்டு திட்டமிட்டுள்ளது.

இந்தக் காப்பீட்டுத் திட்டம் ஆன்லைன் முன்பதிவு மூலம் சபரிமலைக்கு செல்லும் பக்தர்களுக்கு மட்டுமின்றி, ஸ்பாட் புக்கிங் முறையில் முன்பதிவு செய்து செல்லும் பக்தர்களுக்கும் பொருந்தும் வகையில் ஏற்பாடு செய்யப்பட உள்ளது. இதனால் ஆன்லைனில் முன்பதிவு செய்தவர்கள், நேரடி முன்பதிவு மூலம் செல்லும் பக்தர்கள் என இரு தரப்பினரும் இந்தக் காப்பீட்டு வசதியை பெற முடியும்.

இந்தத் திட்டத்தின் முக்கிய அம்சமாக, காப்பீட்டுக்காக பக்தர்களிடம் இருந்து எந்தவிதமான கட்டணமும் வசூலிக்கப்படாது. காப்பீட்டுக்கான பிரீமியம் தொகையை தேவசம் போர்டே செலுத்த உள்ளது. இதற்காக மொத்தம் ரூ.1.5 கோடி பிரீமியம் தொகையை தேவசம் போர்டு செலுத்த திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் சபரிமலைக்கு வரும் பக்தர்களுக்கு கூடுதல் பாதுகாப்பு வசதி கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பக்தர்களின் நலனை கருத்தில் கொண்டு மேற்கொள்ளப்படும் இந்த முயற்சி, சபரிமலைக்கு வரும் ஐயப்ப பக்தர்களுக்கு பயனுள்ளதாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks