உசிலம்பட்டி சார் பதிவாளர் அலுவலகத்தில் 4 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற லஞ்ச ஒழிப்பு போலீசாரின் அதிரடி சோதனை.

லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி சார் பதிவாளர் அலுவலகத்தில், மதுரை மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை ஏடிஎஸ்பி சத்தியசீலன், ஆய்வாளர்கள் ரமேஷ்பிரபு, பாரதிபிரியா, இளந்தென்றல் தலைமையிலான லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். சுமார் 4 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற இந்த சோதனையில் உசிலம்பட்டி அருகே பசும்பொன் முத்துராமலிங்க தேவர் கல்லூரி அருகே வீரணன் என்பவரது 10 சென்ட் விவசாய நிலத்தை வீட்டுமனையாக முறைகேடாக பத்திர பதிவு செய்ய வந்த பிரவீனா என்பவரிடமிருந்து 7,20,000 ரொக்கமும், வேணுகோபால் என்பவரிடமிருந்து 16,000 ரொக்கம், கலஞ்சியம் என்பவரிடம் 8000 ரொக்கம் மற்றும் சார் பதிவாளர் அலுவலகத்தில் அனுமதியின்றி இருந்த ஆவண எழுத்தர்களின் உதவியாளர்கள் ராஜேஸ்வரன் என்பவரிடமிருந்து 14,000 ரொக்கம், அழகுமலை என்பவரிடமிருந்து 4,000 ரொக்கம், போத்திராஜன் என்பவரிடமிருந்து 3000 ரொக்கம் என சுமார் 7,65,000 ரூபாய் ரொக்கத்தை பறிமுதல் செய்து தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

உசிலம்பட்டி சார் பதிவாளர் தமிழ்ச்செல்வி - இடமும் லஞ்ச ஒழிப்பு போலீசார் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் விவசாய நிலத்தை வீட்டு மனையாக பத்திர பதிவு செய்ய வந்த நபர்கள் மற்றும் பத்திர எழுத்தர்களின் உதவியாளர்களை, சார் பதிவாளர் அலுவலகத்திற்குள் வர அனுமதி அளித்தது தொடர்பாகவும், இந்த முறைகேடான பத்திர பதிவில் சார் பதிவாளருக்கு தொடர்பு உள்ளதா என்ற கோணத்திலும் உசிலம்பட்டி சார் பதிவாளர் தமிழ்ச்செல்வி - இடமும் லஞ்ச ஒழிப்பு போலீசார் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.,

Source: Read Full Article