தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக்கழகப் பணியாளர்களுக்கு தீபாவளி போனஸ் மற்றும் கருணைத்தொகை வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

வங்கிக்கணக்கில் ரூ.167.12 கோடி வரவுவைப்பு!

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக அரசுப் போக்குவரத்துக்கழகப் பணியாளர்களுக்கு 2025-2026-ஆம் ஆண்டுக்கான போனஸ் மற்றும் கருணைத்தொகை ரூ.167.12 கோடி 1,06,001 பணியாளர்களுக்கு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் பொதுமக்களின் போக்குவரத்துத் தேவையை பெருமளவு பூர்த்தி செய்வதில் முக்கிய பங்காற்றி வருவதாகவும், 8 அரசு போக்குவரத்து கழகங்களின் 21,333 பேருந்துகள் 10,172-க்கும் மேற்பட்ட வழித்தடங்கள் மூலம், குக்கிராமம் முதல் மாநகரங்கள் உட்பட மக்கள் குடியிருக்கும் அனைத்துப் பகுதிகளுக்கும் தங்குத்தடையின்றி 2.18 கோடி மக்கள் பயன்பெறும் வகையில் வழங்கி வருவதாக தமிழக அரசு குறிப்பிட்டுள்ளது.

"கட்டணமில்லா பயணம் மூலம் 72% மக்கள் பயன்"

தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களின் பங்களிப்பு இன்றியமையாததாகும் எனவும், 72% பயணிகள் கட்டணமில்லா அல்லது சலுகை கட்டணத்தில் பயணித்து பயன் பெறுவதாகவும் கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் போக்குவரத்துக் கழக ஊழியர்களை ஊக்குவித்திடும் வகையில் முதலமைச்சர் உத்தரவின்பேரில் போனஸ் மற்றும் கருணைத்தொகை வரவு வைக்கப்படுவதாகவும் போக்குவரத்துத்துறை அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன் தெரிவித்துள்ளார்.

Source: Read Full Article