"மெத்தம் பெட்டமைன் போதைப் பொருள் விற்பனை"

சென்னை தாம்பரம் அடுத்த பல்லாவரம் பகுதியில் ஐ.டி ஊழியர்களுக்கு மெத்தம் பெட்டமைன் போதைப் பொருள் விற்பனை செய்யப்பட்டு வருவதாக பல்லாவரம் காவல் நிலையத்தினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் விசாரணையை தொடங்கிய போலீசார் , பல்லாவரம் பகுதியைச் சேர்ந்த 26 வயது மதிக்கத்தக்க ஐ.டி., ஊழியர் ஒருவர் மெத்தம்பெட்டமைன் போதைப் பொருளை பயன்படுத்தி வருவதை கண்டறிந்தனர்.

அவரிடம் விசாரணை மேற்கொண்ட போலீசார் மெத்தபெட்டமைன் பயன்படுத்துவது சட்ட விரோதமானது மட்டுமல்ல, வாழ்க்கையையே சீரழிக்கக் கூடியது என எடுத்துக் கூறினர். பின்னர் மனம்மாறிய இளைஞர், நைஜீரிய நாட்டைச் சேர்ந்த ஒருவர், ஒரு கிராம் மெத்தம் பெட்டமைனை 15,000 ரூபாய் முதல் 20,000 ரூபாய் வரை விற்பனை செய்து வருவதாக அதிர்ச்சித் தகவலை வெளியிட்டார்.

"காத்திருந்து கைது செய்த போலீசார்"

அதைத் தொடர்ந்து அந்த இளைஞரை நைஜீரிய நபரைத் தொடர்பு கொண்டு 5 கிராம் மெத்தபெட்டமைன் தரும்படி காவல் துறையினர் பேச வைத்தனர். 5 நாட்களுக்குப் பிறகு வருவதாகக் கூறியதால் காவல் துறையினர் அதுவரை காத்திருந்து அந்நபர் வந்ததும் கைது செய்தனர்.

பிராமிஸ் சுக்வு என்ற அந்த 47 வயது நபரிடமிருந்து 10 கிராம் மெத்தபெட்டமைன் பறிமுதல் செய்யப்பட்டது. பெங்களூருவிலிருந்து மெத்த பெட்டமைனை வாங்கி வந்து மாமல்லபுரம் உள்ளிட்ட இடங்களில் பிராமிஸ் சுக்வு விற்று வந்தது தெரிய வந்தது. அவரைக் கைது செய்து போலீசார், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Source: Read Full Article