செக்காணூரணி காவல் நிலையத்தில் ஓட்டுநர் மரணமடைந்த சம்பவம் நீதிபதி விசாரணை; 3 போலீசார் சஸ்பெண்ட்!

செக்காணூரணி காவல் நிலையத்தில் ஓட்டுநர் மரணமடைந்த சம்பவம் நீதிபதி விசாரணை; 3 போலீசார் சஸ்பெண்ட்!
News Image

உசிலம்பட்டி அருகே செக்காணூரணி காவல் நிலையத்தில் ஓட்டுநர் மரணமடைந்த சம்பவம் தொடர்பாக பேரையூர் நீதிமன்ற நீதிபதி ஆனந்தராஜ் ஒன்றரை மணி நேரத்திற்கும் மேலாக காவல் நிலையத்தில்  விசாரணை நடந்தினார்.

அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துவிட்டு தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே செக்காணூரணி காவல் நிலையத்தில் நேற்று இரவு லாரியில் ஏற்பட்ட தீவிபத்து தொடர்பான விசாரணைக்கு வந்த தேனி மாவட்டம் தேவாரத்தைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் என்ற லாரி ஓட்டுநர், இன்று அதிகாலை காவல் நிலைய கழிவறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். தகவலறிந்து விரைந்து வந்த மதுரை மாவட்ட எஸ்.பி.தேவநாதன் தலைமையிலான போலீசார், தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட பாலகிருஷ்ணன் உடலை மீட்டு உடற்கூறாய்விற்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துவிட்டு தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

காவல் ஆய்வாளர் உள்பட 3 பேர் பணியிடை நீக்கம்

இந்த சம்பவம் தொடர்பாக காவல் ஆய்வாளர் உள்பட 3 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்படும் என ஐஜி விஜேந்திர பிதாரி உத்தரவிட்டுள்ளார். இந்த காவல் நிலைய மரணம் தொடர்பாக பேரையூர் குற்றவியல் மற்றும் நடுவர் நீதிமன்ற நீதிபதி ஆனந்தராஜ், சம்பவம் நடைபெற்ற செக்காணூரணி காவல் நிலையத்தில் நேரில் விசாரணை நடத்தினார்.

சுமார் ஒன்றரை மணி நேரத்திற்கும் மேலாக தீவிர விசாரணையில் ஈடுபட்டார்.

பணியிடை நீக்கம் செய்யப்பட்ட காவல் ஆய்வாளர் முத்து, தலைமை காவலர் பழனிவேல் ராஜன் மற்றும் பணியில் இருந்த பெண் காவலர் கலைச்செல்வி ஆகியோரிடமும், தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட கழிவறை, ஆய்வாளர் அறை பகுதியிலும் ஆய்வு செய்து சுமார் ஒன்றரை மணி நேரத்திற்கும் மேலாக தீவிர விசாரணையில் ஈடுபட்டார்.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks