சம்பந்தப்பட்ட நபர்களின் தொடர்புகள் மற்றும் இந்த விவகாரத்தில் வேறு யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது என்பது குறித்து கனியிடம் விசாரித்து வருவதாகக் கூறப்படுகிறது.

காலை முதல் 5 மணி நேரத்திற்கு மேலாக தீவிர விசாரணை

மதுரை மத்திய தொகுதி தவெக எம்.எல்.ஏ., மதார் பதுரூதீன் (எ) முஸ்தபாவிடம் தவெக அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தின் போது தவெக அரசுக்கு எதிராக வாக்களிக்க 15 முதல் 30 கோடி ரூபாய் வரை பேரம் பேசப்பட்ட புகாரில் முன்னாள் துணை மேயர் பி.எம் மன்னனை மதுரை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் இன்று காலை கைது செய்தனர். பி.எம். மன்னனனிடம் இன்று காலை முதல் 5 மணி நேரத்திற்கு மேலாக தீவிர விசாரணை நடைபெற்றுவருகிறது. மதுரை மாநகர காவல் துணை ஆணையர் தேவி தலைமையில் விசாரணை நடத்திவருகின்றனர். ஆதரவாளர் குவிந்துள்ளதால் காவல்துறையினர் பாதுகாப்பு அதிகரிப்பு. இதனையடுத்து நீதிமன்றத்தில் மன்னனை ஆஜர்படுத்துவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றுவருகிறது. தவெக எம்எல்ஏ மதார் பதுருதீன் உதவியாளர் ஒருவர் மூலமாக எம்எல்ஏவிடம் பேரம் பேசிய புகாரின் கீழ் மன்னனை காவல்துறையினர் கைது செய்தது குறிப்பிடதக்கது. இந்நிலையில் ரூ.15 கோடி குதிரை பேர புகார்: எம்.எல்.ஏ முஸ்தபாவின் உதவியாளர் கனியிடம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

முஸ்தபாவின் உதவியாளரிடம் விசாரணை

தவெக ஆட்சியைக் கவிழ்க்க ரூ.30 கோடி வரை பேரம் பேசப்பட்டதாக எழுந்த புகார் தொடர்பாக மதுரை மாநகர மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளனர். இந்த வழக்கில் அதிமுக நிர்வாகி பி.எம்.மன்னன் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், புகார் அளித்த மதுரை மத்திய தொகுதி தவெக எம்.எல்.ஏ முஸ்தபாவின் உதவியாளர் கனியிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பேரம் பேசப்பட்டதாகக் கூறப்படும் தொலைபேசி உரையாடல்கள், ஆடியோ ஆதாரங்கள், சம்பந்தப்பட்ட நபர்களின் தொடர்புகள் மற்றும் இந்த விவகாரத்தில் வேறு யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது என்பது குறித்து கனியிடம் விசாரித்து வருவதாகக் கூறப்படுகிறது.

Source: Read Full Article