"சினிமா ரீல்ஸ் அரசு: தரம் தாழ்ந்த அரசியல் சித்து விளையாட்டு" - தவெக அரசு மீது இபிஎஸ் கடும் சாடல்!

"சினிமா ரீல்ஸ் அரசு: தரம் தாழ்ந்த அரசியல் சித்து விளையாட்டு" - தவெக அரசு மீது இபிஎஸ் கடும் சாடல்!
News Image

தவெக ஆட்சியைக் கவிழ்க்க பேரம் பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் அதிமுக பிரமுகரும், மதுரை முன்னாள் துணை மேயருமான மன்னன் கைது செய்யப்பட்டதற்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.

அதிமுக பிரமுகர் மன்னன் கைது

சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பில் தவெக அரசுக்கு எதிராக வாக்களிக்கக்கோரி தன்னிடம் ரூ.30 கோடி அளவுக்கு பேரம் பேசப்பட்டதாக மதுரை மத்திய தொகுதி எம்.எல்.ஏ முஸ்தபா குற்றம் சாட்டியிருந்தார். இந்நிலையில் அதிமுக பிரமுகரும், மதுரை முன்னாள் துணை மேயருமான மன்னன் தன்னிடம்  பேரம் பேசி அரசுக்கு எதிராக வாக்களிக்கக் கோரியதாக முஸ்தபா தரப்பில் மதுரை மாநகர் மத்தியக் குற்றப்பிரிவில் புகாரளிக்கப்பட்டது. இந்நிலையில் வழக்கு தொடர்பாக மன்னனிடம் விசாரணை நடைபெற்ற நிலையில், அவர் கைது செய்யப்பட்டார்.

அதிமுக பொதுச்செயலாளர் கண்டனம்

அதிமுக நிர்வாகி பி.எம்.மன்னனின் கைதுக்கு கண்டனம் தெரிவித்து அதிமுக பொதுச்செயலாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில், குதிரை பேரம் நடத்தி தங்கள் கூட்டணியில் உள்ள அமமுக சட்டமன்ற உறுப்பினரை கடத்தி கையெழுத்து வாங்கி ஆட்சிக்கு வருவதற்கு முன்பே அத்தனை தில்லுமுல்லு வேலைகளையும் செய்த கட்சி தான் தவெக என விமர்சித்துள்ளார். மேலும்,ஆட்சி அதிகாரத்தை கையில் வைத்துக்கொண்டு, அஇஅதிமுக சட்டமன்ற உறுப்பினர்களுக்கு வலைவீசி, தலைமைச் செயலகமா? பனையூரின் கிளை அலுவலகமா? என்று மக்களே அருவருக்கும் வகையில், 'கீழ்மாடியில் ராஜினாமா; மேல்மாடியில் இணைப்பு விழா' என்று நாடு காணாததை அரங்கேறிய ஒரே கட்சி தவெக தான் எனவும் சாடியுள்ளார்.

"கட்டுக்கதையை புனைந்து கைது நடவடிக்கை"

மேலும், மதுரை மத்திய தொகுதி சட்டமன்ற உறுப்பினர் முஸ்தபா மூலம் ஒரு கட்டுக்கதையை புனைந்து, அதிமுக நிர்வாகி மன்னனை கைது செய்து புதிய நாடகத்தை நடத்துவது வெட்கக்கேடானது எனக்கூறியுள்ள எடப்பாடி பழனிசாமி, முதல்வரை அணுக முடியாமல் பல Powercenter-களுக்கு நடுவே சிக்கிக்கொண்டு, தவெக ஆட்சி மீது ஆளுங்கட்சி MLA-க்கள் பலரே அதிருப்தியில் இருப்பதாக செய்திகள் வந்துகொண்டு இருப்பதாகவும், சொந்த கட்சி MLA-க்களை சமாதானப்படுத்த வழி தெரியாமல், இப்படி ஒரு கதையை அரசு புனைந்து இருக்கிறதோ? என்ற சந்தேகம் வலுவாக எழுவதாகவும் கேள்வி எழுப்பியுள்ளார்.

பாதிக்கப்பட்டவன் மீதே பழியை சுமத்தி குற்றவாளி பட்டம் கட்டும் பழைய தமிழ் சினிமா பார்முலா-வை அதிமுக மீது திணிக்கப் பார்க்கும் இந்த சினிமா ரீல்ஸ் அரசுக்கு, அதே கதையின் இறுதியில் எல்லா சாயமும் வெளுத்துப் போய் நிற்கப்போவது தாங்கள்தான் என்பது நினைவில் இருக்கட்டும் எனவும், உடனடியாக மன்னனை விடுதலை செய்வதுடன், தரம்தாழ்ந்த அரசியல் சித்து விளையாட்டுகளை நிறுத்திக் கொள்ள வேண்டும் எனவும் வலியுறுத்துவதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குறிப்பிட்டுள்ளார்.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks