கொளத்தூர் தொகுதியில் மு.க.ஸ்டாலினை எதிர்த்து போட்டியிட்டு வெற்றி பெற்ற தவெக எம்எல்ஏ வி.எஸ்.பாபு கடந்த 9ம் தேதி திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனையடுத்து சென்னை அமைந்தகரையில் உள்ள எம்ஜிஎம் ஹெல்த்கேர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். இவரது உடல்நிலை குறித்து பல்வேறு வதந்திகள் பரவிய நிலையில் இதனை மறுத்து மருத்துவனை நிர்வாகம் அவ்வப்போது
வி.எஸ்.பாபு உடல்நிலை குறித்து அறிக்கை வெளியிட்டு வந்தது.

மருத்துவமனையில் வி.எஸ்.பாபு

அதாவது மூச்சு விடுவதில் சிரமம் இருப்பதால் அவருக்கு செயற்கை சுவாசக் கருவிகள் உதவியுடன் மருத்துவ குழுவினர் வி.எஸ்.பாபு உடல்நிலையை தீவிரமாக கண்காணித்து வருவதாகவும் மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. கடைசியாக செப்டம்பர் 22ம் தேதி மருத்துவமனை தரப்பிலிருந்து வி.எஸ்.பாபுவின் உடல்நிலை குறித்து அறிக்கை வெளியானது. அதன் பிறகு மருத்துவமனை தரப்பில் எந்த அறிக்கையும் வெளியாகவில்லை. தொடர்ந்து மர்மம் நீடித்து வந்தது.

இதையும் படிங்க: Ration Card Holder: ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. உடனே வங்கி கணக்கை செக் பண்ணுங்க.!

தமிழக அரசுக்கு கோரிக்கை

இந்நிலையில் வி.எஸ்.பாபுவின் உடல்நிலை குறித்து அதிமுக மாநிலங்களை உறுப்பினர் இன்பதுரை, புதிய தமிழகம் கட்சியினர் தலைவர் கிருஷ்ணசாமி உள்ளிட்டோர் கேள்வி எழுப்பியிருந்தனர். அப்படி இருந்த போதிலும் மருத்துவமனை மற்றும் தமிழக அரசு தரப்பிலோ வி.எஸ்.பாபு உடல்நிலை குறித்து எந்த அறிக்கையும் வெளியாகவில்லை.

இதையும் படிங்க: Magalir Urimai Thogai: தீபாவளிக்கு முன் மகளிர் உரிமைத் தொகை? நாளை வங்கி கணக்கில் வரவு?

தீவிர சிகிச்சை பிரிவில் வி.எஸ்.பாபு

இந்நிலையில் கொளத்தூர் எம்எல்ஏ வி.எஸ்.பாபு உடல்நிலை எப்படி இருக்கு என்று தெரியாத நிலையில் திடீரென மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதாக போட்டோக்கள் சமூகவலைதளங்களில் வைரலானது. இதனை அமைச்சர் அருண் ராஜ் மறுப்பு தெரிவித்துள்ளார். அதாவது வி.எஸ்.பாபு டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதாக பரவிய தகவல் தவறானது. மேலும் கொளத்தூர் எம்எல்ஏ மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு உயரிய சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருகிறது. கூடிய விரைவில் அவரது உடல் நிலை குறித்து அறிக்கை வெளியாகும் என தெரிவித்தார்.

Source: Read Full Article