தமிழகத்தில் இன்று நடந்த 25 முக்கிய செய்திகள் - ஒரே நிமிடத்தில் தெரிந்துகொள்ளுங்கள்!

தமிழகத்தில் இன்று நடந்த 25 முக்கிய செய்திகள் - ஒரே நிமிடத்தில் தெரிந்துகொள்ளுங்கள்!
News Image

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் நடைபெற்ற 25 முக்கிய நிகழ்வுகளின் விரிவான தொகுப்பு. தஞ்சாவூரில் ஆற்றில் ஆண் சடலம் மீட்பு, சேலத்தில் 45 சவரன் நகை கொள்ளை, திருப்பத்தூரில் கொலை மற்றும் தொடர் வாகனத் திருட்டு, வேலூரில் தந்தை மகன் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு, பழனி முருகன் கோவில் உண்டியல் காணிக்கை, தீபாவளி சிறப்பு ரயில் அறிவிப்பு உள்ளிட்ட இன்றைய முக்கியச் செய்திகளை ஒரே இடத்தில் தெரிந்துகொள்ளுங்கள்.

05.11.2026 – இன்றைய விரைவு செய்திகள்

1. தஞ்சாவூர்: கும்பகோணம் மேலக்காவேரி காவிரி ஆற்றுப் பாலத்தின் கீழ் சுமார் 45 வயது மதிக்கத்தக்க ஆண் சடலமாக மீட்கப்பட்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

2. கரூர்: புகலூர் நகராட்சி ஆணையர் மற்றும் மேலாளரை பணியிட மாற்றம் செய்யக்கோரி, நகராட்சித் தலைவர் தலைமையில் அனைத்துக் கட்சி மாமன்ற உறுப்பினர்கள் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

3. சேலம்: ஆத்தூர் அருகே கூட்டுறவுத் துறை துணைப் பதிவாளர் வீட்டின் பூட்டை உடைத்து 45 சவரன் நகைகள் மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்டது. சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

4. தஞ்சாவூர்: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பட்டுக்கோட்டையில் சிறப்பு காவல் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது. நகரம் முழுவதும் 30 சிசிடிவி கேமராக்கள் மூலம் போலீசார் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

5. சேலம்: சேலத்தில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பெய்த கனமழையால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியது. வாகனப் போக்குவரத்து பாதிக்கப்பட்டதுடன், தீபாவளி சாலையோர வியாபாரிகளும் கடும் அவதிக்குள்ளாகினர்.

6. திருப்பத்தூர்: ஜோலார்பேட்டை அருகே பழுதான ஜேசிபி பக்கெட்டை எடுத்துச் சென்ற லாரி, எதிர்பாராத விதமாக ஏரிக்குள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதையடுத்து லாரியை மீட்கும் பணியில் பொதுமக்கள் ஈடுபட்டனர்.

7. தஞ்சாவூர்: மருங்குளம் அரசு மதுபானக் கடையில் பணம் ஸ்கேன் ஆகாததால் டாஸ்மாக் ஊழியருக்கும் மதுப்பிரியருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

8. திருப்பத்தூர்: மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தொடர் இருசக்கர வாகனத் திருட்டில் ஈடுபட்ட 52 வயது நபர் கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து 6 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இவர் மீது 11 வழக்குகள் இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.

9. திருப்பத்தூர்: வாணியம்பாடி அருகே முன்விரோதம் காரணமாக கற்களால் தாக்கப்பட்ட கூலித் தொழிலாளி அனுமுத்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

10. திருவண்ணாமலை: செங்கம் அருகே 16 வயது சிறுமியை காரில் கடத்திச் சென்று பாலியல் துன்புறுத்தல் செய்த இளைஞர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட காரையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

11. திருப்பத்தூர்: வாணியம்பாடி அருகே இடி, மின்னல் தாக்கியதில் 7 ஆடுகள் உயிரிழந்தன. ஆடு மேய்த்துக் கொண்டிருந்த பெண் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

12. சேலம்: மாமாங்கம் பகுதியில் உள்ள சொகுசு விடுதியில் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டை வரவேற்கும் வகையில் கேக் மிக்சிங் திருவிழா நடைபெற்றது. இதில் 200 கிலோ எடையிலான முந்திரி, உலர் திராட்சை, பாதாம் உள்ளிட்ட 20 வகையான உலர் பழங்கள் மற்றும் ஒயின் கலந்து கேக் தயாரிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

13. திருப்பத்தூர்: சார்பதிவாளர் அலுவலகத்திற்குள் புகுந்து இருவரை நாற்காலியால் தாக்கி, கார் கண்ணாடியை உடைத்த சம்பவத்தில் 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் இருவர் கைது செய்யப்பட்ட நிலையில், தலைமறைவான மற்ற இருவரை போலீசார் தேடி வருகின்றனர்.

14. திருப்பத்தூர்: திருப்பத்தூரில் மூன்று கால்களுடன் ஆடு ஒன்று குட்டியை ஈன்றுள்ளது. வித்தியாசமாகப் பிறந்த ஆட்டுக்குட்டியைக் காண பொதுமக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

15. திருப்பத்தூர்: 10 ஆண்டுகள் பணியாற்றிய சுமை தூக்கும் தொழிலாளர்களுக்கு பச்சை நிற அட்டையும், 15 ஆண்டுகள் பணியாற்றியவர்களுக்கு சிவப்பு நிற அட்டையும் வழங்க வலியுறுத்தி தொழிலாளர்கள் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

16. வேலூர்: காட்பாடி ரயில் நிலையத்தில் ரயில்வே போலீசார் மற்றும் ரயில்வே பாதுகாப்புப் படையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். ரயில்களில் பயணிகள் பட்டாசு எடுத்துச் செல்வதைத் தடுக்கும் வகையில் இந்தச் சோதனை நடைபெற்றதுடன், விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டது.

17. திருப்பத்தூர்: ஏலகிரிமலையில் தமிழ்நாடு கலைத்தாய் அனைத்து நாட்டுப்புறக் கலைஞர்கள் நலச் சங்கம் சார்பில் மாவட்ட மாநாடு நடைபெற்றது. இதில் இயல் இசை மன்றத் தலைவர் புஷ்பவனம் குப்புசாமி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த கலைஞர்கள் பங்கேற்று தங்களது கலைத்திறமைகளை வெளிப்படுத்தினர்.

18. மதுரை: தவெக ஆட்சியைக் கவிழ்க்க வாய்ப்பில்லை என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார். தவெகவுக்கு ஆதரவு அளிக்கும் கூட்டணிக் கட்சிகள் தங்களது ஆதரவைத் திரும்பப் பெறப்போவதில்லை என்றும் அவர் கூறினார்.

19. கிருஷ்ணகிரி: ஓசூரில் வெங்காய மூட்டைகளை ஏற்றிச் சென்ற ஈச்சர் லாரி, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து பெங்களூரு - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் கவிழ்ந்தது. இதில் ஓட்டுநர் காயமடைந்தார். வெங்காய மூட்டைகள் சாலையில் சிதறியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

20. வேலூர்: தவெக ஆட்சியில் விலைவாசி உயர்வு, நிர்வாகச் சீர்கேடு மற்றும் சட்டம் ஒழுங்கு பிரச்சினைகள் அதிகரித்துள்ளதாக பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் எச். ராஜா குற்றம்சாட்டியுள்ளார். வேலூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழக அரசு முறையாகச் செயல்படவில்லை என்றும் தெரிவித்தார்.

21. வேலூர்: பேரணாம்பட்டு அருகே விவசாய நிலத்தில் காட்டுப்பன்றிகளைத் தடுக்க மின்வேலி அமைத்தபோது மின்சாரம் பாய்ந்து தந்தை, மகன் இருவரும் உயிரிழந்தனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

22. தூத்துக்குடி: கோவில்பட்டியில் மீண்டும் அரசு பேருந்து நடுவழியில் பழுதாகி நின்றதால் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. பேருந்தை அப்புறப்படுத்த பணிமனையிலிருந்து ஊழியர்கள் வரத் தாமதமானதால் பொதுமக்களும் போக்குவரத்து போலீசாரும் இணைந்து பேருந்தை ஓரமாக நகர்த்தினர்.

23. திண்டுக்கல்: பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் நடைபெற்ற மாதாந்திர உண்டியல் காணிக்கை எண்ணிக்கையில் ரூ.2 கோடியே 26 லட்சத்து 96 ஆயிரத்து 945 ரொக்கம் வசூலானது. மேலும் 286.310 கிராம் தங்கம், 10 கிலோ 752 கிராம் வெள்ளி மற்றும் 393 வெளிநாட்டு கரன்சி நோட்டுகள் கிடைத்தன.

24. டெல்லி: பள்ளி வகுப்பறையில் திடீரென மயங்கி விழுந்த 9 வயது மூன்றாம் வகுப்பு மாணவி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிறுமிக்கு உரிய நேரத்தில் முதலுதவி அளிக்கப்படவில்லை என பெற்றோர் குற்றம்சாட்டியுள்ளனர். மாரடைப்பால் உயிரிழந்ததாக பள்ளி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

25. சென்னை: தீபாவளி பண்டிகை கூட்ட நெரிசலைச் சமாளிக்க தாம்பரத்திலிருந்து திருநெல்வேலிக்கு சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது. நவம்பர் 6-ஆம் தேதி இரவு 7.30 மணிக்குப் புறப்படும் ரயில் மறுநாள் காலை 9.20 மணிக்கு திருநெல்வேலி சென்றடையும். மறுமார்க்கத்தில் நவம்பர் 9-ஆம் தேதி இரவு 7 மணிக்குப் புறப்பட்டு மறுநாள் காலை 9 மணிக்கு தாம்பரம் வந்தடையும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks