TN Govt Entrepreneur: கம்மி வட்டியில் ரூ.5 கோடி வரை கடன்..! தகுதி, தேவையான ஆவணங்கள், விண்ணப்பிக்கும் முறை

TN Govt Entrepreneur: கம்மி வட்டியில் ரூ.5 கோடி வரை கடன்..! தகுதி, தேவையான ஆவணங்கள், விண்ணப்பிக்கும் முறை
News Image

Vettri Women Entrepreneur Scheme Explained: மகளிர் தொழில்முனைவோருக்கான வெற்றி மகளிர் கடன் திட்டம் தொடர்பான அறிவிப்பை தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

தமிழ்நாடு அரசின் வெற்றி மகளிர் கடன் திட்டம்:

தமிழ்நாடு அரசு மகளிர் முன்னேற்றத்திற்காக பல்வேறு நலத்திட்டங்களை முன்னெடுத்து வருகிறது. அந்த வகையில் மகளிர் தொழில்முனைவோர்களை ஊக்குவிக்கும் விதமாக, வெற்றி மகளிர் கடன் திட்டம் செயல்படுத்தப்படும் என கடந்த பட்ஜெட்டில் முதலமைச்சர் விஜய் தலைமையிலான அரசு அறிவித்தது. அந்த வகையில் குறைந்த வட்டியில் 5 கோடி ரூபாய் வரை கடன் வழங்குவது தொடர்பான அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. இதில் பயன்பபெறுவதற்கான தகுதிகள் என்ன? தேவைப்படும் ஆவணங்கள் என்ன? விண்ணப்பிக்கும் வழிமுறை என்ன? என்பது உள்ளிட்ட முழு விவரங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.

திட்டத்தின் நோக்கம் என்ன?

தமிழ்நாடு அரசின் அறிவிப்பின்படி, உற்பத்தி மற்றும் சேவைத் துறைகளில் புதிய தொழிற்சாலைகளை நிறுவுவதற்கும், ஏற்கனவே உள்ள தொழிற்சாலைகளை விரிவுபடுத்துவதற்கும், நவீனமயமாக்குவதற்கும் அல்லது பல்வகைப்படுத்துவதற்குமான மகளிர் தொழில் முனைவோருக்கான சிறப்பு நிதியுதவி திட்டம் இதுவாகும். தொழிற்சாலைகளுக்கு தேவையான நிலம் வாங்குவதற்கும், திட்டம் சார்ந்த கட்டிடங்களை கட்டுவதற்கும், இறக்குமதி செய்யப்பட்ட அல்லது உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட புதிய இயந்திரங்கள் மற்றும் சாதனங்களை வாங்குவதற்கும் இந்த நிதியுதவி வழங்கப்படும்.

விண்ணப்பிக்க தகுதி வாய்ந்த நிறுவனங்கள்:

மகளிர் தொழில்முனைவோரால் தொடங்கப்பட்டு குறைந்தபட்சம் 51 சதவிகித பங்குரிமை கொண்டுள்ள

தனியுரிமை ஒரு மனித நிறுவனங்கள் (Proprietary One Person Company)

GOLD நிறுவனங்கள் & வரையறுக்கப்பட்ட பொறுப்புக் கூட்டாண்மை (Partnership/LLP Firms)

தனியார் மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள் (Private/Public Ltd. Company) ஆகிய நிறுவனங்கள் இந்த திட்டத்தின் கீழ் விண்ணப்பித்து பலன் பெறலாம்.

இதையும் படியுங்கள்: TN Weather News: 32 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..! இன்று எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு? சென்னை? வானிலை அறிக்கை

எவ்வளவு கடன் கிடைக்கும்?

தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு குறைந்தபட்சமாக ரூ.10 லட்சம் தொடங்கி அதிகபட்சமாக 10 கோடி ரூபாய் வரை கடன் வழங்கப்படுகிறது.

பயனர்களின் பங்களிப்பு தொகை:

புதியதாக தொடங்கப்படும் நிறுவனங்களுக்கு மொத்த திட்ட செலவில் 20 சதவிகிதம் பயனர்கள் பங்களிக்க வேண்டும்

ஏற்கனவே இயங்கும் நிறுவனங்களை விரிவுபடுத்த விரும்புவோர் மொத்த திட்ட செலவில் 15 சதவிகிதத்திற்கு பொறுப்பேற்க வேண்டும்

வட்டி விகிதம்:

மகளிர் வெற்றிக் கடன் திட்டம் நிதியுதவி பெறுபவர்கள் தற்போதைக்கு ஆண்டுக்கு 9.95 சதவிகித வட்டியுடன் பணத்தை திருப்பி செலுத்த வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கடனை திருப்பி செலுத்தும் முறை, கால அவகாசம்:

மாதத்தவணை முறையில் கடனை திருப்பி செலுத்தலாம். 2 ஆண்டுகள் வரையிலான  தவணை ஒத்திவைப்பு காலம் உட்பட ஒட்டுமொத்தமாக 9 ஆண்டுகளுக்குள் கடனை திருப்பி செலுத்த வேண்டும்.

விண்ணப்பதாரர்களுக்கான பிணை & செலவு:

புதிய மற்றும் 3 ஆண்டுகளுக்கும் குறைவாகவே செயல்பட்டு வரும் தொழில் நிறுவனங்கள் அசையாச் சொத்து வடிவில் கடன் தொகையில் 40 சதவிகிதத்தை பிணையாக சமர்பிக்க வேண்டும்

நல்ல செயல்பாட்டுப் பதிவுடன் தொடர்ந்து 3 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வரும் தொழில் நிறுவனங்கள் அசையாச் சொத்து வடிவில் கடன் தொகையில் 20 சதவிகிதத்தை பிணையாக சமர்பிக்க வேண்டும்

இத்திட்டத்தின் கீழ் அனுமதிக்கப்படும் கடன்களுக்கு ஆய்வுக்கட்டணம் எதுவும் வசூலிக்கப்படாது

அதேநேரம்,  கடன்தொகையில் 0.25 சதவிகிதம் சலுகை கட்டணம் செலுத்தப்படவேண்டும்

விண்ணப்பதாரர்களுக்கான தகுதிகள் என்ன?

பெண்கள்/ மூன்றாம் பாலினத்தவர்களை சேர்ந்த  தொழில்முனைவோருக்கான இந்த திட்டத்தில் விண்ணபிக்க,

வயது: 18 முதல் 55 ஆண்டுகள் வரை இருக்க வேண்டும்

குடும்ப ரேஷன் கார்டு கொண்ட தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் ஆக இருக்க வேண்டும்

கல்வித்தகுதி தேவையில்லை, வருமான வரம்பு எதுவும் இல்லை

ஒவ்வொரு குடும்பத்திலும் ஒரே ஒருவருக்கு மட்டுமே அனுமதி

முன்னுரிமை பயனாளிகள்: பட்டியலினத்தவர்/ பழங்குடியினர், மூன்றாம்

மாற்றுத்திறனாளிகள், விதவைகள்/ ஆதரவற்ற விதவைகள் மற்றும் வறுமைக் கோட்டுக்கு கீழ் (BPL) உள்ள பெண்கள் தகுதியானவர்கள் ஆவர்.

விண்ணபிக்க தேவையான ஆவணங்கள்:

ஆதார் அட்டை

ரேஷன் கார்ட்

திட்ட அறிக்கை

சாதிச்சான்றிதழ்

இடமாற்றச் சான்றிதழ் / SSLC / HSC / டிப்ளமோ / பட்டச் சான்றிதழ் (கட்டாயமல்ல).

விற்பனையாளர் GST எண்ணுடன் கூடிய விலைப்புள்ளி

பாஸ்போர்ட் அளவு புகைப்படம்.

வங்கி இருப்புக் கையேடு.

மாற்றுதிறனாளிகள் / மூன்றாம் பாலினத்தவர்/ விதவைகள்/ ஆதரவற்ற விதவைகள்/ வறுமைக் கோட்டுக்கு கீழ் ஆகியோருக்கான சான்றிதழ் (சிறப்பு வகை நபர் மட்டும் பதிவேற்ற வேண்டும்)

விண்ணபிக்கும் வழிமுறை:

கடன் திட்டத்தில் விண்ணப்பிக்க தகுதியான நபர்கள் MSME Online TN அல்லது தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் (TIIC) அதிகாரப்பூர்வ வலைத்தளத்தை அணுகவும்

முகப்புப் பக்கத்தில் உள்ள "இணைய வழி விண்ணப்பிக்க" (Apply Online) என்ற பொத்தானைக் க்ளிக் செய்து, பயனரின் அடிப்படை விவரங்களை வழங்கி புதிய கணக்கை உருவாக்க வேண்டும்

லாகின் செய்த பிறகு, உங்களின் தனிப்பட்ட விவரங்கள், கல்வித்தகுதி, நீங்கள் தொடங்கவிருக்கும தொழில் சார்ந்த திட்ட அறிக்கை போன்ற விவரங்களை நிரப்புங்கள்

கேட்கப்பட்டுள்ள தேவையான ஆவணங்களை ஸ்கேன் செய்து பிடிஎஃப் வடிவில் இணையதளத்தில் பதிவேற்றுங்கள்

அனைத்து விவரங்களையும் சரிபார்த்து விண்ணப்பத்தை சமர்ப்பிக்கவும்

சமர்ப்பித்த பிறகு வரும் ஒப்புதல் சீட்டை எதிர்காலத் தேவைக்காகப் பதிவிறக்கம் செய்து வைத்துக்கொள்ளவும்

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks