SC On CEC: “நீங்களே சொந்தமா முடிவெடுத்திங்களா?” ஞானேஷிற்கு செக்? தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

SC On CEC: “நீங்களே சொந்தமா முடிவெடுத்திங்களா?” ஞானேஷிற்கு செக்? தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
News Image

SC On CEC:  தலைமை தேர்தல் ஆணையர் தன்னிச்சையாக முடிவெடுத்தாரா? என தேர்தல் ஆணையம் விளக்கமளிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

தலைமை தேர்தல் ஆணையரை சஸ்பெண்ட் செய்ய மனு:

வாக்காளர் பட்டியல் மற்றும் வாக்காளர் பதிவு பணிகள் போன்றவற்றில் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தன்னிச்சையாக முடிவெடுத்ததாகவும், மற்ற இரண்டு தேர்தல் ஆணையர்கள் மாறுபட்ட கருத்து கொண்டிருந்த போதும் அவற்றை பரிசீலிக்கவில்லை என்றும் ஆங்கில நாளேடு செய்தி வெளியிட்டு இருந்தது. இதனை கையிலெடுத்த காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், தலைமை தேர்தல் ஆணையர் மத்தியில் ஆளும் பாஜகவிற்கு ஆதரவாக செயல்படுவதாக குற்றம்சாட்டின. அவர் உடனடியாக பதவி விலக வேண்டும் என போராட்டங்களும் அறிவிக்கப்பட்டன. அதோடு, தலைமை தேர்தல் ஆணையரை பணியிடை நீக்கம் செய்ய வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டது.

”சஸ்பெண்ட் செய்ய முடியாது” - உச்சநீதிமன்றம்

தலைமை நீதிபதி சூர்யகாந்த் அடங்கிய அமர்வில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, “ஊடக தகவல்களின் அடிப்படையில்  உத்தரவு பிறப்பிக்க முடியாது” என தெரிவிக்கப்பட்டது. பல உறுப்பினர்களைக் கொண்ட முழு தேர்தல் குழுவிற்கு, அரசியலமைப்பின்படி வழங்கப்பட்ட அதிகாரங்களை தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தனி ஒருவராகச் செயல்படுத்த முடியுமா? என்பதைத் தீர்மானிக்க தேர்தல் ஆணையம் பதிலளிக்க வேண்டும் என நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அதில், மற்ற இரண்டு தேர்தல் ஆணையர்களின் ஒப்புதலைப் பெறாமல், தலைமைத் தேர்தல் ஆணையர் தேர்தல் ஆணையத்தில் தன்னிச்சையாக முடிவுகளை எடுத்தார் என்ற குற்றச்சாட்டுகள் குறித்து பதிலளிக்குமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.

”தேர்தல் ஆணைய நடவடிக்கைகளை ரத்து செய்வோம்”

வழக்கு விசாரணையின் போது, “செய்தித்தாள் அறிக்கை 100% சரியாகவோ, பகுதியளவு சரியாகவோ அல்லது தவறாகவோ இருக்கலாம். அதன் அடிப்படையில் இன்று எங்களால் உத்தரவு பிறப்பிக்க முடியாது. எங்களுக்கு நிச்சயமாக அவர்களின் விளக்கம் தேவைப்படும். சட்டம் பின்பற்றப்படாத நிகழ்வுகள் இருந்ததை நாங்கள் கண்டறிந்தால், அதை ரத்து செய்யலாம். முடிவுகள் ஒருமனதாகவோ அல்லது பெரும்பான்மையினரின் உதவியுடனோ எடுக்கப்படவில்லை என்று கண்டறியப்பட்டால், அவற்றுக்குத் தடை விதிக்கப்படலாம். ஆனால், அனைத்து முடிவுகளும் ஒருதலைப்பட்சமாக எடுக்கப்பட்டன என்று தன்னிச்சையாக முடிவு செய்ய முடியாது” என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

குற்றச்சாட்டுகளும், தேர்தல் ஆணைய விளக்கமும்..!

வாக்காளர் பட்டியல், வாக்காளர் பதிவு மற்றும் ஆணையத்தின் தொழில்நுட்ப அமைப்புகள் தொடர்பான முடிவுகள் குறித்து, தேர்தல் ஆணையர்களான சுக்பீர் சிங் சந்து மற்றும் விவேக் ஜோஷி ஆகியோர் கடந்த 10 மாதங்களில் குறைந்தது 14 முறையாவது முறைப்படி ஆட்சேபனை தெரிவித்து இருப்பர்கள் என ஆங்கில நாளேட்டில் குறிப்பிடப்பட்டு இருந்தது. இதற்கு விளக்கமளித்த தேர்தல் ஆணையம், “ தேர்தல் ஆணையர்களால் தெரிவிக்கப்பட்ட ஆட்சேபணைகள், இறுதி முடிவுகள் மீதான கருத்து வேறுபாட்டிற்குச் சமம் என ஏற்க முடியாது” என குறிப்பிடப்பட்டு இருந்தது.

இதையும் படியுங்கள்: DMK: துவரம்பருப்ப விடுங்க, பாமாயிலை அதிக விலைக்கு வாங்கியது ஏன்? தவெக அரசுக்கு திமுக கேள்வி

மேலும், “வரைவு கட்டத்தின் போது எழுப்பப்பட்ட கேள்விகள், வழங்கப்பட்ட ஆலோசனைகள் மற்றும் பரிந்துரைகள் ஆகியவை அதன் வழக்கமான நிர்வாக மற்றும் முடிவெடுக்கும் செயல்முறையின் ஒரு பகுதியாகும் எனவும்,  சிறப்பு வாக்காளர் திருத்தப் பட்டியல் பணிகள் தொடர்பான முடிவுகள் ஒருமனதாக எடுக்கப்பட்டவை” என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks