PM Modi Chennai visit : பூந்தமல்லி - வடபழனி மெட்ரோ ரயில் ரெடி.! சென்னை வரும் மோடியின் பயண திட்டம் என்ன.? முழு விவரம் இதோ..

PM Modi Chennai visit : பூந்தமல்லி - வடபழனி மெட்ரோ ரயில் ரெடி.! சென்னை வரும் மோடியின் பயண திட்டம் என்ன.? முழு விவரம் இதோ..
News Image

பூந்தமல்லி- வடபழனி மெட்ரோ ரயில்

சென்னையில் மெட்ரோ ரயில் திட்டத்திற்கு பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு ஏற்பட்டதையடுத்து. பல்வேறு இடங்களில் மெட்ரோ ரயில் திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டு வருகிறது.  அந்த வகையில், சென்னை மெட்ரோ ரயிலின் 2ஆம் கட்டத்தில் 118.9 கி.மீ. தூரத்தில் 3 வழித்தடங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. இதில் முதல்கட்டமாக பூந்தமல்லி புறவழிச்சாலை முதல் வடபழனி வரை 14.64 கி.மீ. வழித்தடமாக பயணிகள் சேவைக்குத் தயார் நிலையில் உள்ளது. இதனையடுத்து  வருகிற அக்டோபர் 11ஆம் தேதி இந்த வழித்தடத்தில் மெட்ரோ ரயில் சேவையை  பிரதமர் மோடி தொடங்கி வைக்கவுள்ளார். தமிழக முதலமைச்சராக விஜய்யும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கவுள்ளார்.

பிரதமர் மோடி சென்னை பயணம்

இந்த நிலையில் பிரதமர் மோடியின் தமிழக பயண திட்டம் தொடர்பான தகவல் வெளியாகியுள்ளது. அக்டோபர் 11ஆம் தேதி காலை 8 மணிக்கு டெல்லியில் இருந்து புறப்படும் பிரதமர் மோடி, 10.55 மணியளவில் சென்னை விமான நிலையத்திற்கு வந்தடைகிறார். இதனையடுத்து அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் பூந்தமல்லியில் உள்ள ஹெலிபேட்டிற்கு சென்று சேருகிறார். காலை 11.30 மணியளவில் பூந்தமல்லி மெட்ரோ ரயில் நிலையம் வரும் மோடி, அங்கிருந்து போரூர் ரயில் நிலையம் வரை மெட்ரோ ரயிலில் பயணம் செய்கிறார்.

இதனையடுத்து மதியம் 12 மணிக்கு போரூர் மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்து காரில் புறப்பட்டு சென்னை ஐஐடியில் நடைபெறும் ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் தலைமை அதிகாரிகளோடு ஆலோசனை மேற்கொள்கிறார். அடுத்தாக அங்கிருந்து அதே வளாகத்தில் உள்ள ஜலகண்டேஸ்வரர் கோயிலில் சாமி தரிசனம் செய்கிறார்.

இளையராஜா நிகழ்வில் மோடி

மதிய உணவு இடைவேளைக்கு பிறகு பிற்பகலில், இசைஞானி இளையராஜாவின் இசை சிறப்பு மையத்தை தொடங்கி வைக்கிறார். அடுத்தாக சென்னை கன்வென்ஷன் மையத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறகு மாலை 5 மணியளவில் சென்னை விமானம் நிலையம் வரும் பிரதமர் மோடி அங்கிருந்து விமானம் மூலம் டெல்லிக்கு புறப்பட்டு செல்கிறார். தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், பிரதமர் மோடி பங்கேற்கும் முதல் நிகழ்வாகும். எனவே மெட்ரோ ரயில் தொடக்க விழாவில் பிரதமர் மோடியுடன் தமிழக முதலமைச்சர் விஜய்யும் பங்கேற்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Source: Read Full Article

கருத்துரையிடுக

Please Select Embedded Mode To Show The Comment System.*

புதியது பழையவை

Post Ads 1

Post Ads 2

Whoever You Are, Whatever You Do, Wherever You May Be

When You Think of Refreshment Think of Ice Cold Coca-Cola

© IPD Tamil. All Rights Reserved. This material may not be published, transmitted, rewritten or redistributed.
Owned,Developed & Maintained by
IPD Media Networks