தமிழ்நாட்டில் இந்தியா கூட்டணி சார்பில் நடைபெறும் கூட்டத்தில் முதல்முறையாக தமிழக வெற்றிக் கழகம் பங்கேற்கவுள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது.

தவெக - காங்கிரஸ் கூட்டணி

2026 சட்டமன்ற தேர்தலுக்கு முன் காங்கிரஸ் கட்சி திமுக கூட்டணியில் இருந்தது. ஆனால் தேர்தலில் வெற்றி பெற்ற தவெக பெரும்பான்மை இல்லாமல் தவிக்க, 5 இடங்களில் வெற்றி பெற்ற காங்கிரஸ் திமுக கூட்டணியை முறித்துக் கொண்டு அக்கட்சிக்கு ஆதரவு கொடுத்தது. அதுமட்டுமல்லாமல் தவெக அமைச்சரவையில் உயர்கல்வித்துறை, சுற்றுலாத்துறை ஆகிய 2 அமைச்சரவை இடங்களையும் பெற்றது. தேர்தலுக்கு முன்பே தவெக - காங்கிரஸ் கூட்டணி உருவாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கடைசியில் திமுகவுடன் தான் காங்கிரஸ் கூட்டணி தொடர்ந்தது.

<iframe title="Vettri Payana Thittam | வெற்றிப் பயண திட்டம்.. துவக்கி வைத்த CM விஜய் !மகிழ்ச்சியில் மகளிர்" src="https://www.youtube.com/embed/Vgff-shKRUQ" width="1101" height="619" frameborder="0" allowfullscreen="allowfullscreen">

இந்தியா கூட்டணியில் இருந்து திமுக விலகல்

இதனிடையே சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு காங்கிரஸ் கட்சி கூட்டணியை முறித்ததால் கடும் அதிருப்தியடைந்த திமுக மத்தியில் காங்கிரஸ் அமைத்த இந்தியா கூட்டணியில் இருந்து விலகுவதாக அறிவித்தது. காங்கிரஸின் இந்தச் செயலால் திமுக தொண்டர்களின் உணர்வுகள் பெரிதும் புண்பட்டுள்ளதாகவும், அவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பு அளித்து டெல்லியில் நடைபெற்ற இந்தியா கூட்டணி ஆலோசனைக் கூட்டங்களை திமுக புறக்கணித்தது கூட்டணியில் இருந்து விலகி இருந்தாலும், நாட்டின் இறையாண்மை, கூட்டாட்சி தத்துவம்போன்ற மக்களின் நலன் சார்ந்த தேசியப் பிரச்சினைகளில் இந்தியா கூட்டணியில் உள்ள பிற எதிர்க்கட்சிகளுடன் இணைந்து தொடர்ந்து குரல் கொடுப்போம் என்று விளக்கம் கொடுத்தது.

இந்தியா கூட்டணியில் தவெக

இந்த நிலையில் இந்தியா கூட்டணிக்கும் தவெகவை கொண்டுவரும் முயற்சிகளை காங்கிரஸ் மேற்கொண்டது. திமுக வெளியேறியதைத் தொடர்ந்து, தவெக இந்தத் தேசிய அளவிலான கூட்டணியில் தன் பங்களிப்பைத் தொடங்கியுள்ளது. அதன் எதிரொலியாக இந்திய தலைமை தேர்தல் அதிகாரி ஞானேஷ் குமாரை நீக்கக்கோரி, தமிழ்நாட்டில் இந்தியா கூட்டணியின் ஆலோசனை கூட்டம் இன்று சென்னை சத்தியமூர்த்தி பவனில் நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தில் தமிழக வெற்றிக்கழகமும் பங்கேற்கிறது. அக்கட்சி சார்பில் அமைச்சர்கள் ஆதவ் அர்ஜுனா, மரிய வில்சன் ஆகியோர் பங்கேற்கின்றனர்.

தேர்தல் ஆணையத்தின் மற்ற இரு ஆணையர்களின் எதிர்ப்புகளையும் மீறி இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் ஒருதலைப்பட்சமாக செயல்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தேர்தல் ஆணையம் மேற்கொண்ட SIR நடவடிக்கை உள்ளிட்ட விவகாரங்களில் மிகப்பெரிய சதி நடந்திருப்பதாக அண்மையில் வெளியான தகவல்களை அடிப்படையாக கொண்டு எதிர்க்கட்சிகள் கடும் விமர்சனங்களை முன்வைத்துள்ளது. இதனால் ஞானேஷ் குமாரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என அக்டோபர் மாதத்தில் காங்கிரஸ், கம்யூனிஸ்ட்கள் தொடங்கி பல்வேறு அரசியல் கட்சியினரும் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Source: Read Full Article