தமிழகத்தில் 7 தொகுதிகள் காலியாக உள்ள நிலையில் 5 தொகுதிகள் தேர்தல் தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளுக்கு மட்டும் தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதன்படி மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளுக்கு அக்டோபர் 6ம் தேதி வாக்குப்பதிவும், அக்டோபர் 9ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன.

இரண்டு தொகுதிகளுக்கு இடைத்தேர்தல்

இந்த இடைத்தேர்தலில் எப்போதும் இல்லாத வகையில் ஐந்து முனை போட்டி நிலவி வருகிறது. ஆளும் தவெக, எதிர்க்கட்சியான திமுக, அதிமுக, நாம் தமிழர் கட்சி, கம்யூனிஸ்ட் கட்சிகள் களத்தில் உள்ளன. சட்டமன்ற தேர்தலுக்கு வெற்றி பெற்றதை அடுத்து தனது முதல் இடைத்தேர்தலை சந்திக்கும் தவெக வெற்றி பெற வேண்டும் தீவிரமாக இருந்து வருகிறது. அதேநேரத்தில் திமுக, அதிமுக ஆளும் தவெகவை தோற்கடிக்க வேண்டும் என்பதால் சூறாவளி பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். நேற்று மாலை 6 மணியுடன் பிரச்சாரம் ஓய்ந்த நிலையில் நாளை காலை மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

இதையும் படிங்க: School Holiday: பள்ளி மாணவர்களுக்கு காத்திருக்கும் இன்ப அதிர்ச்சி.. அக்டோபர் 5, 6 பள்ளிகளுக்கு விடுமுறை!

ஊதியத்துடன் கூடிய விடுமுறை

இந்நிலையில் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளுக்கு நாளை பொதுவிடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்: இரு சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு உட்பட்ட பகுதிகளில் நாளை பொது விடுமுறை அமலில் இருக்கும். அன்றைய தினம் அரசு அலுவலகங்கள், அரசு தொழில் நிறுவனங்கள், அரசின் கட்டுப்பாட்டில் உள்ள நிறுவனங்கள், மற்றும் கல்வி நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்டிருக்கும். மேலும், மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு உட்பட்ட பகுதிகளில் பணியாற்றும் ஊழியர்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுமுறை வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசு

செங்கல்பட்டு மற்றும் திருப்பூர் மாவட்டங்கள் மட்டுமின்றி அண்டை மாவட்டங்களில் பணிபுரியும் ஊழியர்களில் மதுராந்தகம், தாராபுரம் ஆகிய சட்டப் பேரவை தொகுதிகளை சேர்ந்த வாக்காளர்களுக்கும், அக்டோபர் 6ம் தேதி ஊதியத்துடன் கூடிய விடுமுறை வழங்க வேண்டும் என தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

Source: Read Full Article